கன்னடரை தாக்கிவிட்டு கொல்கத்தாவில் விமானப்படை அதிகாரி தலைமறைவு.. பெங்களூருவில் பரபரப்பு!

பெங்களூரு இந்திய விமானப்படை அதிகாரியை கன்னடம் பேசிய சிலர் தாக்கிய விவகாரத்தில், விமானப்படை அதிகாரிக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 22, 2025, 04:57 PM IST
  • நேற்று (ஏப்ரல் 21) விமானப்படை அதிகாரிக்கும் கால்செண்டர் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது
  • பெங்களூருவில் நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்
கன்னடரை தாக்கிவிட்டு கொல்கத்தாவில் விமானப்படை அதிகாரி தலைமறைவு.. பெங்களூருவில் பரபரப்பு!

பெங்களூர் சிவி ராமன் நகரில் வசித்து வருபவர் ஷில்லாதித்யா போஸ். இவரது மனைவி மதுமிதா. இருவரும் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகின்றனர். இச்சூழலில் நேற்று (ஏப்ரல் 21) இவர்கள் இருவரும் பெங்களூரு விமான நிலையத்திற்கு சொன்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். 

Add Zee News as a Preferred Source

இதையடுத்து அங்கிருந்து தனது கணவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் மதுமிதா. இந்த சம்பவம் தொடர்பாக போஸும் ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்தபடியும் சிகிச்சை பெற்ற பின்னர் விமான நிலையத்தில் இருந்தபடியும் வீடியோ பதிவிட்டு இச்சம்பவம் குறித்து விளக்கி இருந்தார். அதில், தன்னை கன்னடம் பேசியவர் சாவியால் தாகியதாகவும் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் எவரும் உதவி செய்யவில்லை என்றும் கூறி இருந்தார். 

இதையடுத்து ஷில்லாதித்யா போஸின் மனைவி மதுமிதா பையப்பன ஹள்ளி காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து விசாரித்த போலீசார் விகாஷ் குமார் என்ற கால்செண்டர் ஊழியரை அழைத்து விசாரித்தனர். விகாஷ் குமார், கார் தான் முதலில் பைக்கில் மோதியது. இதை தட்டிக்கேட்டபோது அவர் என்னை தாக்கினார். கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு மிதித்தார் என கூறினார். 

இதையடுத்து விமானப்படை அதிகாரி போஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சில பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொல்கத்தாவிற்கு சென்ற போஸ் அங்கு தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில், கன்னட அமைப்பினர் கால்செண்டர் ஊழியர் விகாஷ் குமாருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு விமானப்படை அதிகாரி போஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இது குறித்து ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் செட்டி பேசுகையில், கன்னடர்கள் நம் நாட்டு வீரர்களை எப்போதும் மதிப்பவர்கள். ஆனால் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரின் செயல்பட்டு என்பது விமானப்படை அதிகாரி போல் இல்லை. அவர் கன்னட மக்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கிறார். அந்த அதிகாரி விகாஷை தாக்கி அவரது செல்போனை பிடுங்கி எரிந்துள்ளார். சிசிடிவி காட்சிகள் மட்டும் இல்லாவிட்டால் விகாஷை ரவுடி என முத்திரை குத்தி இருப்பார்கள். இந்த விவகாரத்தில் அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன் என கூறினார். 

மேலும் படிங்க: பெங்களூருவில் இந்திய விமானப்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கன்னட கும்பல்.. வீடியோ!

மேலும் படிங்க: அரசு பேருந்தில் உடலுறவு..வைரலான வீடியோ! நடத்துனருக்கு வந்த வேட்டு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News