ரேஷன் அட்டையே இல்லையா... இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!

Ration Card: ரேஷன் அட்டை உங்களிடம் இல்லையென்றால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இந்த திட்டங்களில் உங்களால் பயன்பெற முடியாது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 21, 2025, 07:16 AM IST
  • ரேஷன் அட்டை முக்கியமான ஆவணமாகும்.
  • ரேஷன் அட்டையே பல திட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
  • குறிப்பாக, ஏழை - எளியோர் இதை பெறுவது முக்கியம்.
ரேஷன் அட்டையே இல்லையா... இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!

Importance Of Ration Card: மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் சமூக ரீதியாக பிற்படுத்தப்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், நலிவடைந்த மற்றும் விளிம்பு நிலை மக்கள் தங்களின் அன்றாட வாழ்வை மேற்கொள்ள பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

Add Zee News as a Preferred Source

ஏழை எளியோர் மட்டுமின்றி நடுத்தர வர்க்க பெண்களும் பயனடையும் வகையில் கூட பல்வேறு திட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் சமூகத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பின் அடி வேரில் இருந்து முளைத்தது எனலாம். இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த திட்டங்களை செயல்படுத்தும் போது சில கட்டுப்பாடுகளையும் வைத்திருப்பார்கள்.

Ration Card Importance: ரேஷன் அட்டையின் முக்கியத்துவம்

அரசுகள் கொண்டுவரும் திட்டங்கள் அவை தேவைப்படுவோருக்கு சரியாக சென்றுசேர வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், உங்களிடம் ரேஷன் அட்டை (Ration Card) இல்லாவிட்டால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களில் நீங்கள் பயனடைய முடியாது. 

ஆதார் அட்டை (Aadhaar Card) இப்போது பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாக இருந்தாலும் ரேஷன் அட்டையும் சில திட்டங்களுக்கு அடிப்படையான ஆவணமாக இருக்கிறது. அந்த வகையில், ரேஷன் அட்டையில்லை என்றால் மக்களால் பயனடைய முடியாத திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

Ration Card Importance: இந்த திட்டங்களுக்கு ரேஷன் அட்டை தேவை 

- முதலில், ரேஷன் அட்டை இல்லையெனில் ரேஷன் கடைகளில் உங்களால் நியாய விலையில் சர்க்கரை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை பெற முடியாது. பொது விநியோக முறைப்படி (PDS) பல்வேறு உணவுப் பொருள்கள் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும். ஒருவேளை உங்களிடம் ரேஷன் அட்டை இல்லாவிட்டால் இதன் பயன்கள் உங்களுக்கு கிடைக்காது.

- ரேஷன் அட்டை இல்லையென்றால், நீங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் (BPL) இருந்தால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் அந்த பட்டியலில் சேர்க்கப்பட மாட்டீர்கள். வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போர் பட்டியலில் இணைய ரேஷன் அட்டை முக்கியம். உங்களிடம் ரேஷன் அட்டை இல்லையெனில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு கிடைக்கும் சலுகைகள், பயன்கள் கிடைக்காது. வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக பொருள்கள் வழங்கப்படுகிறது. 

- பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், நீங்கள் இலவசமாக சமையல் எரிவாயூ சிலிண்டர் இணைப்பை பெற வேண்டும் என நினைத்தால் நிச்சயம் ரேஷன் அட்டை தேவை. இந்த திட்டம் ஏழை எளிய பெண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு முக்கிய ஆவணமே ரேஷன் அட்டைதான். எனவே, ரேஷன் அட்டை இல்லாவிட்டால் இந்த திட்டத்தில் சேர முடியாது. 

- பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா (PMJAY) திட்டத்தின்கீழ் மக்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயனடைய ரேஷன் அட்டை தேவை. ரேஷன் அட்டை இல்லாவிட்டால் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவது மிக மிக சிரமம். 

- மேலே குறிப்பிட்ட திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் உடையது. இதேபோல், ரேஷன் அட்டை இல்லையெனில் சில மாநில அரசு திட்டங்களிலும் உங்களால் பயனடைய முடியாது. உதாரணத்திற்கு, தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தி வரும் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) ரேஷன் அட்டை இல்லாமல் இணைய முடியாது. அத்திட்டத்தில் ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத் தலைவிகள் மட்டுமே பயனடைய முடியும். அதேபோல், பொங்கலை ஒட்டி தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற சலுகைகளும் கிடைக்காது. 

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : கைவிரல்ரேகை பதிவு செய்யவில்லையா? தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தொடங்கும் தமிழக அரசு

மேலும் படிக்க | மின்னணு ரேஷன் கார்டு ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News