)
Travel Tips In Monsoon Season: மழைக் காலத்தில் பலரும் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். குறிப்பாக, பசுமையான மலைப் பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு செல்ல அதிகம் விருப்பப்படுவார்கள். இருப்பினும், பயணம் செய்வதற்கு சில முக்கியமான விஷயங்களையும் மனதில்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், இந்த மழைக்காலத்தில் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Travel Tips: வானிலையை முன்னாடியே செக் பண்ணனும்
நீங்கள் எங்கள் பயணம் செல்கிறீர்கள் என்பதை தேர்வு செய்வது முக்கியம். அதுவும் எந்த தேதியில், எப்படி பயணிக்கப் போகிறீர்கள் என்பதையும் நிச்சயம் 10 நாள்களுக்கு முன்னராவது உறுதிசெய்ய வேண்டும். இதையடுத்து, நீங்கள் திட்டமிட்ட நாளில், நீங்கள் பயணிக்க இந்த இடத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் பயணிக்க இருந்த நாளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டால், உடனே மாற்று தேதி குறித்தோ அல்லது மாற்று இடம் குறித்தோ யோசிக்கலாம். அதிலும் கனமழை எச்சரிக்கை, நிலச்சரிவு எச்சரிக்கை, சாலைகள் தடைப்பட்டது உள்ளிட்ட வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு செவி கொடுக்க வேண்டும். எந்த பிரச்னையும் இல்லாத இடங்களுக்கு திட்டமிட வேண்டும். இதனால் சிரமத்தை தவிர்க்கலாம்.
Travel Tips: இந்த விஷயங்களை எடுத்துச் செல்லவும்
மழையில் இருந்து உங்களை பாதுகாக்கும் வகையில் நல்ல நிலையில் இருக்கும் தரமான குடைகள், ரெயின்கோட், தண்ணீரில் நனைந்தாலும் பிரச்னை தராத காலணிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் மழையில் நனையாமல், உடல்நிலை மோசமாவதை தடுக்கலாம். பேக்அப் உடைகளை எடுத்துச் செல்லவும். மழையில் நனைந்துவிட்டாலும் ஈரத்தோடு இருக்காமல் புதிய உடைகைளை உடுத்திக்கொள்ளலாம். மொபைல் போன்ற எலெக்ட்ரிக் சாதனங்கள் தண்ணீர் படாமல் இருக்க பிளாஸ்டிக் கவர்களை மறக்க கூடாது.
Travel Tips: தங்குமிடம் முக்கியம் பிகிலு...
வெள்ளம் வந்தால் தப்பிக்கும் வகையிலும், மின்சாரம் போனாலும் பிரச்னை இல்லாமல் இருக்கும் என்ற உத்தரவாதங்களை அளிக்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை தேர்வு செய்யவும். இவற்றை நீங்கள் இணையத்திலேயே அடையாளம் காணலாம். மேலும், ஆறுகள், நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்குவதை தவிர்க்கவும். மழைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த பகுதிகளில் வெள்ளம் வரலாம்.
Travel Tips: அடிப்படை மருந்துகளும் அவசியம்
காய்ச்சல், சளி, இருமல், வயிறு கோளாறு உள்ளிட்ட பொதுவான உடல்நல பிரச்னைகளுக்கான மருந்துகளை நிச்சயம் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். மழை காரணமாகவும், திடீரென்ற வானிலை மாற்றத்தாலும் பலரின் உடல்நலமும் திடீரென பாதிக்கப்படும். அந்த நேரங்களில் இந்த மருந்துகள் நிவாரணியாக இருக்கும். நிச்சயம் கொசு விரட்டியை எடுத்துச் செல்லுங்கள். மழைக் காலங்களில் கொசுக்கள் அதிகமாக இருக்கும் என்பதை மறக்கக்கூடாது.
Travel Tips: 'லோக்கல் கை' பேச்சை கேளுங்கள்
நீங்கள் ஒரு சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் சில அறிவுரைகளை கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை கவனமாக காது கொடுத்துக் கேட்டு மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மழைக் காலத்தில் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக் கூடாது என்பது பற்றி மற்றவர்களை விட உள்ளூர்வாசிகளுக்கே தெரியும்.
Travel Tips: அதிக லக்கேஜ்ஜை கொண்டு செல்லாதீர்கள்...
மழைக்காலத்தில் முடிந்தளவு குறைந்த லக்கேஜை எடுத்துச் செல்லுங்கள். இதனால் உங்கள் பயணத்தின் சிரமத்தை குறைத்துக்கொள்ளலாம். சாலைகள், பாதைகள் நிச்சயம் மழையால் மோசமடையும். கார், பைக், பேருந்து என எதில் சென்றாலும் குறைந்த அளவிலான லக்கேஜை எடுத்துச் செல்வது உங்களுக்கு சௌகரியத்தை அளிக்கும். நிச்சயம் இது உதவும்.
Travel Tips: பயணக் காப்பீட்டையும் மறக்காதீர்கள்
மழைக் காலத்தில் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படும். அதேபோல், உங்களின் லக்கேஜ் சேதமடையலாம். உடல்நிலையும் கூட பாதிக்கப்படலாம். எனவே நீங்கள் பயணக் காப்பீட்டை வைத்திருப்பதன் மூலம் கூடுதல் பணத்தை செலவு செய்ய தேவையில்லை. எனவே பயணக் காப்பீடு குறித்தும் இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ