இந்திய ரயில்வேயின் உணவு: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி. இனி நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டி இருக்கும். அதன்படி ரயில்வே உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி இனி மக்கள் ரயில்வேயில் விலை (indian railways food price list) உயர்ந்த உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வு ரொட்டி முதல் தேநீர் வரை அனைத்திலும் பொருந்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெனுவில் பல புதிய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ள
ரயில்வே உணவு மெனுவில் மேலும் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. அதனால்தான் ரயில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரயிலின் பேண்ட்ரி காரில் காணப்படும் சாதாரண உணவுகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘அப்ரைசல்’ ! சம்பள அதிகரிப்பை உறுதிப்படுத்தும் TCS


உணவு விலைகள் பற்றி IRCTC கூறியது என்ன?
இதன் பின்னணியில் உள்ள கதையை ஐஆர்சிடிசி கூறியுள்ளது, அதன்படி விலைவாசி நிச்சயம் அதிகரித்திருக்கிறது, ஆனால் சாமானியர் சாப்பிட முடியாத அளவுக்கு விலை அதிகரிக்கவில்லை. உணவு மெனுவில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டு அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரயிலில் ரொட்டி, தோசை, தால், குலாப் ஜாமுன் மற்றும் சாண்ட்விச் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. அதே சமயம் பேன்ட்ரி காரில் கிடைக்கும் சாதாரண உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் ஐஆர்சிடிசி தெளிவுப்படுத்தியுள்ளது.


எந்தெந்த பொருட்களின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது
ரயில்வேயின் உணவு மெனுவில் பல பொருட்கள் உள்ளன. இதில் ரொட்டி, தோசை, தால், குலாப் ஜாமூன், சாண்ட்விச் போன்ற பல பொருட்களின் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.


>> ரொட்டி - ரூ.3ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
>> சாண்ட்விச் - ரூ 15 முதல் ரூ 25 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
>> மசாலா தோசை - ரூ.40ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
>> பிரட் பக்கோடா - ரூ.10ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
>> ஆலு போண்டா- 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 8th Pay Commission: காத்திருக்கும் குட் நியூஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ