)
Kurnool Bus Fire Latest Updates: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம், உல்லிந்தகொண்டா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 44 இல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அதிகாலையில், ஒரு வால்வோ பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு காவேரி டிராவல்ஸ்-ஆல் இயக்கப்படும் இந்த பேருந்தில் 41 பயணிகள் இருந்தனர்.
நேற்று இரவு 10 மணி அளவில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி தனியார் சொகுசு ஸ்லிப்பர் கோச் பஸ் புறப்பட்டு சென்றது. காவேரி டிராவல் என்ற இந்த சொகுசு பேருந்தில் மொத்தம் 43 பேர் இருந்தனர். அதாவது ஒரு ஓட்டுனர், ஒரு நடத்துனர் மற்றும் மீதமுள்ள பயணிகள் என மொத்தம் 43 பேர் பயணம் செய்தனர். இவர்கள் பயணம் செய்த பேருந்து ஆந்திர மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை 44-ல் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த போது கர்னூல் அருகே உள்ளிந்த கொண்டா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. அப்பொழுது பெரும்பாலோர் இந்த சோகத்தின் போது தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த மோதல் காரணமாக டிரைவரின் இடதுபுறத்தில் இருக்கும் தானியங்கி கதவுகளில் இருந்த வயர்கள் டேமேஜ் ஆனாதால், உடனடியாக பஸ்ஸின் கதவை திறக்க இயலவில்லை. மேலும் இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கிகொண்டது. அதன் காரணமாக பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து தீப்பொறி பரவ ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அந்த பேருந்து ஓட்டுனர் அந்த தீயை அணைக்க தன்னிடமிருந்த தண்ணீர் மூலம் முயற்சி செய்கிறார். ஆனால் தீ வேகமாக பரவியதால், அவரால் தீயை அணைக்க முடியவில்லை. பேருந்து முழுவதும் தீ பற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது.
பேருந்தின் தானியங்கி கதவுகள் செயலிழந்துவிட்டதால், உடனடியாக பயணிகள் வெளியில் இறங்க வழியில்லை. மறுபக்கம் தீ வேகமாக பரவியது. என்ன செய்வதென்று தெரியாமல், எப்படியாவது உயிர் தப்பிக்க வேண்டும் என பேருந்தில் இருந்த பயணிகள் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்துள்ளனர். ஏசி பேருந்து என்பதால், அனைத்தும் கண்ணாடிகளும் அடைக்கப்பட்டு இருந்தது. பேருந்து குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ கோச் என்பதால், பூட்டிய கதவுகள் மற்றும் உள்ளே அதிக வெப்பநிலை காரணமாக பயணிகள் தப்பிக்க கடினமாக இருந்தது. ஒரு சிலர் கண்ணாடி உடைத்து வெளியே வந்தாலும், சுமார் 20 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.
இந்த விபத்து குறித்து அறிந்தவுடம் சம்பவத்தை இடத்திற்கு மீட்புக் குழுக்கள் மற்றும் போலீசாரை அனுப்பி 21 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். அதே நேரத்தில் 11 உடல்களை அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ளவர்களையும் அடையலாம் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் அறிவியல் ஆய்வகம் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்து கல்லூர் மண்டலத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகில் அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 3:10 மணிக்கு இடையில் நிகழ்ந்துள்ளது என போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ கோச் என்பதால், பூட்டிய கதவுகள் மற்றும் உள்ளே அதிக வெப்பநிலை காரணமாக பயணிகள் தப்பிக்க கடினமாக இருந்தது. பலர் ஜன்னல்களை உடைத்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீப்பிழம்புகள் எழுந்ததும், சிலர் சரியான நேரத்தில் வெளியே குதித்தனர். பேருந்து கதவுகளைத் திறக்க முடியாமல் போனது பயங்கரமானதாக இருந்தது என்று உயிர் பிழைத்தவர்கள் கூறினார்.
உள்ளூர் அவசர சேவைகள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தன. ஆனால் பேருந்து முற்றிலும் எரிந்து போனது. கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ சிரி கூறுகையில், பேருந்து ஓட்டுநர்கள் இருவரும் தீயில் இருந்து தப்பினர். மேலும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அடையலாம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கவும், முடிந்தவரை பிரேத பரிசோதனை செய்யவும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர் எனக் கூறினார்.
இந்த சோக சம்பவத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோடு, "பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு ₹2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் "இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன" என்று பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
Extremely saddened by the loss of lives due to a mishap in Kurnool district of Andhra Pradesh. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) October 24, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be…
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, "பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருடனும் முழு மாநிலமும் ஆதரவாக இருக்கும் என உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் "பேரழிவு" என்று அவர் கூறியுள்ளார்.
I am shocked to learn about the devastating bus fire accident near Chinna Tekur village in Kurnool district. My heartfelt condolences go out to the families of those who have lost their loved ones. Government authorities will extend all possible support to the injured and…
— N Chandrababu Naidu (@ncbn) October 24, 2025
ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலை தென்னிந்தியாவின் மிகவும் பரபரப்பான பாதைகளில் ஒன்றாகும். மேலும் பல ஆண்டுகளாக பல சாலை விபத்துகளைக் கண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பொது போக்குவரத்து சம்பந்தப்பட்ட முதல் துயர சம்பவம் இதுவல்ல. கர்னூலுக்கு அருகிலுள்ள தற்போதைய விபத்து நடந்த இடத்தில் இதற்கு முன்பும் பல பேருந்து விபத்துக்கள் நடந்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. இது சாலை பாதுகாப்பு, வாகன பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் விழிப்புணர்வு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இரவு நேர பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. இந்திய சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான இன்றியமையாத தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்த விபத்து.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ