)
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) என்ற ஏஐ சேவையின் ஓராண்டு சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000 ஆகும். இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏர்டெல் மொபைல், பிராட்பேண்ட், டிடிஎச் உள்ளிட்ட அனைத்து சேவைகளின் பயனர்களும் இதை க்ளெயிம் செய்யலாம். பெர்ப்ளெக்சிட்டி என்பது ஏஐ அடிப்படையிலான செர்ச் இன்ஜின் (Search Engine). இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி, துல்லியமான பதில்களை வழங்கும். இந்த இலவச சலுகை, ஏர்டெல் நிறுவனத்தின் 360 மில்லியன் பயனர்களுக்கும் கிடைக்கும். இதை எப்படி க்ளெயிம் செய்வது, அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Perplexity Pro - ஏர்டெல்
Perplexity Pro AI சேவை அதிக சிறப்பம்சங்களைக் கொண்டது. இது ஜிபிடி-4.1, க்ளாட் போன்ற மேம்பட்ட ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி, தினசரி 300 ப்ரோ தேடல்களை வழங்குகிறது. படங்களை உருவாக்குவது முதல், ஆராய்ச்சி படிப்புகள் வரை அனைத்திலும் இந்த AI உதவும். இது வேலை, கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றுக்கு உதவும். ஏர்டெல் இதை இலவசமாக வழங்குவது, இந்தியாவில் ஏஐ பயன்பாட்டை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கு முன்பு ஓடிடி சேவைகளை இலவசமாக வழங்கிய ஏர்டெல், இப்போது ஏஐ துறையில் கால்பதிக்கிறது.
Perplexity Pro-வின் நன்மைகள்
பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ, சாதாரண தேடல் இன்ஜின்களை விட சிறப்பானது. இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்கும், அதுவும் ஆதாரங்களுடன் வழங்கும். உதாரணமாக, பயண திட்டம், சமையல் குறிப்பு, ஆராய்ச்சி தகவல்கள் போன்றவற்றை எளிதாகப் பெறலாம். ப்ரோ பதிப்பில்:
ஏர்டெல் பயனர்கள் எப்படி க்ளெயிம் செய்வது?
ஏர்டெல் பயனர்கள் இந்த சலுகையை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் க்ளெயிம் செய்யலாம். இதற்கு கிரெடிட் கார்டு தேவையில்லை.
- உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை (Airtel Thanks App) திறக்கவும். இல்லையெனில் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யவும்.
- ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனு (மூன்று கோடுகள்) க்ளிக் செய்யவும். 'ரிவார்ட்ஸ் அண்ட் ஓடிடிஸ்' (Rewards and OTTs) என்ற பிரிவைத் தேர்வு செய்யவும்.
- ரிவார்ட்ஸ் பிரிவில் 'பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ - 12 மாதங்கள் இலவசம்' என்ற பேனரைத் தேடுங்கள். அதை க்ளிக் செய்யவும்.
- 'க்ளெயிம் நவ்' (Claim Now) பட்டனை அழுத்துங்கள். பின்னர் 'ப்ரோசீட்' (Proceed) க்ளிக் செய்யுங்கள்.
- பெர்ப்ளெக்சிட்டி இணையதளத்தில் உள்நுழையவும். இது உங்களை பெர்ப்ளெக்சிட்டி இணையதளத்துக்கு திருப்பிவிடும். உங்கள் ஜிமெயில் அல்லது ஆப்பிள் ஐடி உடன் உள்நுழையவும். ஓடிபி சரிபார்த்து ஆக்டிவேட் செய்யவும்.
- உங்கள் கணக்கில் 'ப்ரோ (ஏர்டெல்)' என்று காட்டப்படும். இது ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கிடைக்கும், எனவே விரைந்து க்ளெயிம் செய்யுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ