Government Employees Latest News: அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. கிராஜுவேட்டி மற்றும் பென்ஷன் கிடைக்காது? என்ற புதிய மாற்றம் குறித்து முக்கிய அப்டேட் வந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் யாருக்கு பொருந்தும்? என்ன மாதிரியான வழிமுறைகள் வெளியாகி இருக்கிறது? என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு சில விதிகளை கடுமையாக்கி இருக்கிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கிடைக்காமல் போகலாம் என்று அரசினுடைய சமீபத்திய விதி ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக பணிகளை சரியாக மேற்கொள்ளாத பணியாளர்களுக்கு இனி சிக்கல் ஏற்படலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய குழுவின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பாக சமீபத்தில் சில புதிய அறிவிப்புகள் வெளிவந்தது. இவை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தங்களுக்கான கடமைகளை சரிவர செய்யாமல் விதிகளை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஒரு ஊழியர் தனது பணிகாலத்தில் வேலையில் அலட்சியமாக நடந்து கொண்டாலோ அல்லது ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டாலோ, ஓய்வு பெற்ற பிறகு அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் என்று எச்சரித்து அரசு அறிவிப்பை வெளியிட்டது.
மத்திய சிவில் சர்வீஸ் ஓய்வூதிய விதி 2021ல் செய்யப்பட்ட எட்டு மாற்றங்களின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் பணியிடத்தில் ஏதேனும் கடுமையான தவறு செய்தால் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நியமன அதிகாரிகளுக்கு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த உரிமை உண்டு.
பணியின் போது அலட்சியம் காட்டுவது, பணி ஓய்வுக்கு பின்பு நிதி உதவியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் விதிகளைப் பின்பற்றுவதில் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு எச்சரிக்கிறது.
மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு விசாரணை நடத்தப்பட்டு, அவர் தவறு செய்தார் என கண்டறியப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்ட தொகை திரும்ப பெறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதிய குழுவின் கீழ் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவேட்டி நிறுத்தப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ யூபிஎஸ்சி இடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட வேண்டும். அந்த ஊழியருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி 44 படி மாதம் ரூ.9000 குறைந்தபட்ச நிலை தொகை வழங்கப்படும். இந்த விதி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
எனவே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த விதிகளைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம் அரசு ஊழியர்களுடைய விதிகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். இதன் மூலம் அவர்களின் பணியில் முழு கவனம் செலுத்தி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையில் எந்தவித சிக்கலும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க - 8வது சம்பள கமிஷன் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், ஊதியம், ஓய்வூதியம் அதிரடியாய் உயரும்
மேலும் படிக்க - எட்டாவது ஊதியக் குழுவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! வெளியான முக்கியத் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









