)
4 Year Old Girl Dies: பெங்களூருவில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பெங்களூரு, தாவணகேரே மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய்கள் தாக்கியதில் கடுமையாக காயமடைந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறுமி நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
சிறுமி கதிரா பானு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் சிறிதளவு நலம் அடைந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உடல் நிலை மீண்டும் மோசமடைந்து, வாந்தி, வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டன. பின்னர், அவருக்கு ராபீஸ் (Rabies) ஏற்பட்டது தெரியவந்தது. பல மாதங்களாக போராடிய அவர், ஞாயிறு இரவு பெங்களூருவிலுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சிறுமியின் மாமா சாஜித் கூறுகையில், “அவளை காப்பாற்ற 9-10 லட்சம் ரூபாய் வரை செலவழித்தோம். எல்லா முயற்சிகளும் செய்தோம். ஆனாலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. தாவணகேரே நகரத்தில் நிறைய தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற குழந்தைகள் இதுபோன்ற துயரத்துக்கு ஆளாகக் கூடாது,” எனக் கண்கலங்கியபடி தெரிவித்தார்.
இதேபோல் சமீபத்தில் பெங்களூருவிலுள்ள Dr.B.R. அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டு மாணவர்கள் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது தெருநாய்கள் கடித்த சம்பவமும் நடந்தது. ஜூலை மாதத்தில், 68 வயதான சீத்தப்பா என்பவர் வீட்டின் முன் சென்றபோது நாய்கள் தாக்கி உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் 2024-இல், பெங்களூருவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரும் தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்திருந்தார்.
கார்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டின் ஜூலை 31-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 2.81 லட்சம் நாய் கடிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். விஜயபுரா மாவட்டத்தில் மட்டும் 15,527 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன் பின் பெங்களூரு நகரம் (13,831), ஹசன் (13,388), தட்சிண கன்னடா (12,524) மற்றும் பாகல்கோட் (12,392) ஆகிய இடங்கள் அதிக நாய்க்கடி சம்பவங்களை பதிவு செய்துள்ளன.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ