Caste Based Census In India: இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தியாவின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
Caste Based Census: 2027இல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு
ஆனால், கொரோனா பரவல் காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து சென்சஸ் நடத்தாமல் மத்திய அரசு அதை தள்ளிப்போட்டு வந்த நிலையில், இந்த முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. மேலும் 2027ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
Caste Based Census: சென்சஸ் எப்போது தொடங்குகிறது?
இந்நிலையில், 2027ஆம் ஆண்டு நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்பதை தற்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் சென்சஸ் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த தேதியில் சென்சஸ் தொடங்கப்படும் என்றாலும், சில பகுதிகளில் வானிலை சார்ந்த பிரச்னைகள் இருக்கும் என்பதால் அந்த பகுதிகளில் மட்டும் சென்சஸ் வேறு தேதியில் தொடங்குகிறது.
Caste Based Census: இந்த பகுதிகளில் முன்கூட்டியே தொடங்கும் சென்சஸ்
ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பனி அடர்ந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகள், லடாக் போன்ற பகுதிகளில் 2026ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து சென்சஸ் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிற பகுதிகளில் தொடங்குவதற்கு 5 மாதங்களுக்கு முன்னரே இங்கு சென்சஸ் தொடங்கிவிடும். முன்னரே சொன்சஸ் தொடங்கும் இடங்களில் வானிலை சாதகமாக இருக்கும் காலகட்டங்களிலேயே கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. எனவே, கணக்கெடுப்பை எவ்வித சிரமமும் இன்றி, மக்களை எளிதாக அணுகும் விதத்திலும் இருக்கும்.
Caste Based Census: 2 கட்டங்களாக நடைபெறும் சென்சஸ்
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வீட்டுவசதி பட்டியல் செயல்பாட்டில் தொடங்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த வீட்டு நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் வசதிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். இதைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு (PE) இரண்டாம் கட்டமாக நடைபெறும். இதில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரைப் பற்றிய சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் சேகரிக்கப்படும். இதில் சாதிவாரி கணக்கெடுப்பு அடங்கும்.
Caste Based Census: டிஜிட்டல் முறையில் சென்சஸ்
சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் சென்சஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு பெரிய குழு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்தியாவில் சென்சஸ் தொடங்கப்பட்டதில் இருந்து இது 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும், சுதந்திர இந்தியாவில் இது 8வது முறையாகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்முறையை மிக துல்லியமாகவும், வசதியானதாகவும் மாற்ற இது மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். கூடுதலாக, சுய-கணக்கெடுப்பு ஆப்ஷன்களும் பொதுமக்களுக்குக் கிடைக்கும். இதனால் தனிநபர்கள் தங்கள் தகவல்களை நேரடியாக வழங்க முடியும்.
மேலும் படிக்க | AI வந்தாலும் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது!
மேலும் படிக்க | சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! எப்படி பெறுவது?
மேலும் படிக்க | இந்தியாவையே சுற்றும் வைரல் இன்ஸ்டா பிரபலம்... யார் இந்த ராதிகா சுப்பிரமணியம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ