மகளிருக்கு அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை - எந்த மாநிலம் அதிகம் கொடுக்கிறது தெரியுமா?

Incentive Schemes For Woman: தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போல் மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகை திட்டம் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 9, 2025, 09:12 AM IST
  • திமுக 2021இல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது.
  • 2021இல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி செயல்படுத்தினார்.
  • தற்போது 8 மாநிலங்களில் மகளிருக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது.
மகளிருக்கு அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை - எந்த மாநிலம் அதிகம் கொடுக்கிறது தெரியுமா?

Incestive Schemes For Woman: பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும். அப்படியிருக்க, மகளிருக்கு மேலும் பொருளாதார நன்மையளிக்கும் வகையில் மாநில அரசுகள் மாதந்தோறும் தகுதிவாய்ந்த மகளிருக்கு ஊக்கத்தொகை அளித்து வருகின்றன.

Add Zee News as a Preferred Source

Incestive Schemes For Woman: தமிழ்நாடு முதல் டெல்லி வரை

2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 என அறிவித்தது பெரிய வரவேற்பை பெற்றது. இருப்பினும் இந்த திட்டம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் அறிமுகமானது. தற்போது டெல்லியில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளால் மகளிருக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகை திட்டங்களை இங்கு வரிசையாக பார்க்கலாம். 

1. தமிழ்நாடு - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

21 வயதை அடைந்த மகளிர் முதல் அனைத்து தகுதிவாய்ந்த மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு வருமானம், நிலம் வைத்திருப்பது, மின்சார பயன்பாடு உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன. இதில் சுமார் 1 கோடியே 40 லட்சம் பயனாளர்கள் உள்ளனர்.

2. ஜார்க்கண்ட் - முக்கியமந்திரி மைய சம்மான் யோஜனா

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 21 வயது முதல் 50 வயது வரையிலான மகளிர் இந்த திட்டத்தில் பயனடைகிறார்கள். இத்திட்டத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவிட இத்திட்டம் வழிவகை செய்கிறது.

3. மேற்கு வங்கம் - லட்சுமி பந்தர் திட்டம்

2021ஆம் ஆண்டில் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது. 25 வயது முதல் 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுவே, எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு ரூ.1,200 வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தகுதிபெறுவதற்கு, ஸ்வஸ்தியசாதி திட்டத்தின்கீழ்  பெண்கள் விண்ணப்பத்திருக்க வேண்டும், சில தகுதிகளும் பார்க்கப்படுகின்றன.

4. மகாராஷ்டிரா - மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா

21 வயது முதல் 65 வயது வரையிலான பெண்களுக்கு தற்போதைய பாஜக அரசு இந்தாண்டின் தொடக்கத்தில் கொண்டு வந்த திட்டம்தான் முக்கியமந்திரி மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா. இதில் மாதந்தோறும் தகுதிவாய்ந்த பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 3 எல்பிஜி சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் சுகாதார திட்டங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

5. கர்நாடகா - க்ருஹ லட்சுமி யோஜனா

2023ஆம் ஆண்டு காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின்படி, இத்திட்டம் கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படுகிறது. இதில் சுமார் 1 கோடியே 33 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். 

6. மத்திய பிரதேசம் - லாட்லி பெஹ்னா யோஜனா

மார்ச் மாதம் 2023ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் புதிய  இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாதந்தோறும் ரூ.1,250 வழங்கப்படுகிறது. 

7. ஒடிசா - சுபத்ரா யோஜனா

ஒடிசாவில் அமைந்த பாஜக அரசு கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் இந்த சுபத்ரா யோஜனா தொடங்கி வைக்கப்பட்டது. 21 வயது முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது. ரக்ஷ பந்தன் மற்றும் சர்வதேச மகளிர் தினம் ஆகிய ஆண்டுக்கு இரு தவணையாக ரூ.5000 வழங்கப்படுகிறது. 2029ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். 1 கோடி பேர் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.

8. டெல்லி - மகிளா சம்ரித்தி யோஜனா

டெல்லியில் தற்போது ஆட்சியமைத்த ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு மாதத்திற்கு ரூ.2,500 வழங்கும் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்கு சர்வதேச மகளிர் தினமான நேற்று (மார்ச் 8)  ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத்தை உத்தரவாதமாக பெண்களுக்கு வழங்குகிறது. 

திமுக ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தபோது, பலரும் இது சாத்தியப்படாது, மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையை அதிகரிக்கும் என பல விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும் இது பல மாநிலங்களுக்கு விரிவடைந்திருப்பதன் மூலமே இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடிகிறது. 

மேலும் படிக்க | பெண்களுக்கு மாதம் ரூ.2,500... யார் யாருக்கு கிடைக்காது...? வந்தது புதிய அப்டேட்!

மேலும் படிக்க | பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இத செஞ்சா போதும்.. உங்க வங்கி கணக்கில் ₹2500 செலுத்தப்படும்

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்கும் போது இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News