Wacth Video : கோலி, ரோஹித் செய்த தவறுகள் - அடுத்தடுத்த ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா!

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியின் முக்கிய கட்டத்தில், இந்திய அணியின் மோசமான பீல்டிங்தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2022, 11:19 AM IST
  • இந்திய சொதப்பல் பேட்டிங்.
  • இந்திய தொடக்க பந்துவீச்சு அபாரம்.
  • மோசமான பீல்டிங்கல் வெற்றியை தவறவிட்ட இந்தியா
Wacth Video : கோலி, ரோஹித் செய்த தவறுகள் - அடுத்தடுத்த ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா! title=

ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில், இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றது. 

அதில், பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்தியா - தென்னாப்பிரிக்க போட்டியில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 133 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை குவித்தார். தென்னாப்பிரிக்க அணியில் இங்கிடி 4 விக்கெட்டுகளையும், பர்னால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி தொடர் 2 வெற்றிகளுக்கு பின், இந்த தொடரில் தனது முதல் தோல்வியை சந்தித்தது. 

மேலும் படிக்க | தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி! இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகிறதா?

சுப்பர் 12 சுற்றின் இரண்டாவது பிரிவு புள்ளிப்பட்டியலில், தென்னப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பிலும், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரின் அசத்தாலன பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க தொடக்க பேட்டர்களை தடுமாற வைத்தனர். இதனால், தென்னாப்பிரிக்கா பவர்பிளே முடிவில், 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து, 10 ஓவர்கள் முடிவிலும் அந்த அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 40 ரன்களையே எடுத்திருந்தது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

ஹர்திக் பாண்டியா வீசிய 11ஆவது ஓவரில் இருந்துதான், மார்க்ரம் - மில்லர் ஜோடி அதிரடியை கைக்கொள்ள தொடங்கினர். அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்களை எடுக்கப்பட்டது. 

இதையடுத்து, 12ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில், பவுண்டரி உள்பட ஏழு ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது. அப்போது, 35 ரன்களுடன் மார்க்ரம் ஸ்டிரைக்கில் இருந்தார். அஸ்வின் வீசிய 5ஆவது பந்தை அவர் டீப் மிட்-விக்கெட் திசையில் தூக்கியடித்தார். அங்கு பீல்டிங்கில் இருந்த விராட் கோலி, தனது கைக்கு வந்த எளிமையான கேட்ச் வாய்ப்பை தவறிவிட்டார். 

அடுத்து 13ஆவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தில் மார்க்ரமை ரன்-அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதை கேப்டன் ரோஹித் சர்மா தவறிவிட்டார். அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு வாய்ப்புகளை இந்திய அணி தவறிவிட்டதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மில்லர் - மார்க்ரம் ஜோடியை அப்போதே பிரித்திருந்தால், அதன்பின் வரும் பின்வரிசை பேட்டர்கள் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி அளித்திருக்கலாம் என்றும் அந்த எளிதான வாய்ப்புகளை இந்தியா தவறிவிட்டது எனவும் கூறப்படுகிறது. இந்திய தனது அடுத்த இரண்டு போட்டிகளையும் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

வரும் நவ. 2ஆம் தேதி வங்கதேச அணியுடனும், நவ. 6ஆம் தேதி ஜிம்பாப்வே அணியுடனும் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க | INDvsSA: ’குசும்பு கொஞ்சம் அதிகம்’ அம்பயரிடம் சில்மிஷம் செய்த சாஹல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News