)
Independence Day 2025: இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். உலக நாடுகளுக்கு மத்தியில் வெற்றிப்பாதையை வகுத்து, அதில் வீறுநடை போட்டு முன்னேறிக்கொண்டிருக்கும் நாட்டின் மக்கள் என்ற வகையில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று, ஆங்கிலேயர்களின் அடிமை ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தின் பயனால் அடிமைகளாய் இருந்த நம் நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கினார்கள். 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட நாம் சுதந்திர நாட்டின் குடிமக்களாய் சுதந்திர காற்றை சுவாசித்தோம்.
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றம்
இன்று டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றுவார். இன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ‘புதிய பாரதம்’ என்று பொருள்படும் ‘நயா பாரத்’. வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சுதந்திர தின செய்தியை தொடர்ந்து, பிரதமர் மோடியின் உரையில் இந்தியாவின் கூட்டு முன்னேற்றம் மற்றும் வரவிருக்கும் வாய்ப்புகளை பற்றிய செய்திகளிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றாது.
உலக நாடுகளுக்கு முன்னோடி இந்தியா
ஒரு காலத்தில் அடிமை கோலத்தில் இருந்த நாம் இன்று நாட்டு மக்களுக்கு முன்னோடியாய் இருக்கிறோம். நாம் இன்று உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறோம். உலகின் பல நாடுகள் நம்மிடம் பாடம் கற்கின்றன. பல நாடுகளுக்கு பல வழிகளில் நாம் உதவி வருகிறோம். உலக நாடுகள் அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் நாம் பல சாதனைகளை செய்து வருகிறோம். இந்தியா ‘விஷ்வ குரு’, அதாவது உலகின் ஆசான் என்ற நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.
பாருக்குள்ளே நல்ல நாடு
இந்த உடலிக் ஒரு புனித பூமியாய், வழிகாட்டியாய், ஆசானாய் நம் இந்தியா விளங்குகிறது. தினம் தினம் நமது நாட்டில் திருவிழாதான். பல மொழிகள், மதங்கள், உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் என பலவித வண்ணங்கள் சேர்ந்த ஒரு அழகுமிகு ஓவியமாய் இந்தியா மிளிர்ந்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமைக்கு நமது நாட்டைக் காட்டிலும் ஒரு மேன்மையான உதாரணத்தை காட்டிவிட முடியாது. ஆனால், இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்தது சுதந்திரம். அதை அடைய நாம் கடந்து வந்த பாதை பலரது தியாகத்தையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
சுதந்திரத்துக்கு உரம் போட்ட தியாகிகள்
இன்று நாம் சுதந்திரமாய் வாழ்கிறோம். எனினும், இந்த சுதந்திரம் அத்தனை எளிதாக வந்துவிடவில்லை. இதற்காக ஏராளமானோர் தங்கள் வாழ்க்கை, குடும்பம், உயிர் என அனைத்தையும் தியாகம் செய்துள்ளார்கள். இன்று விண்ணை நோக்கி பறக்கும் நாம் ஒரு காலத்தில் அன்னியனுக்கு அடிமைப்பட்டிருந்தோம். பேசவும், நடக்கவும், சிரிக்கவும் அனுமதி பெற வேண்டிய அவல நிலையில் தான் பல காலம் வாழ்ந்திருந்தோம். சுதந்திரத்திற்கான போராட்டம் மிக நீண்டதாகவும் மிக தீவிரமானதாகவும் இருந்தது.
பல சுதந்திர போராட்ட வீரர்களின் நாட்டுப்பற்று, விடா முயற்சி, சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவை நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்தின் அடித்தளமாக இருக்கின்றன. பலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் சுதந்திர போராட்டத்திற்காக அர்ப்பணித்தனர். எப்பாடுபட்டாவது என் நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே அவர்களின் ஒரே எண்ணமாக இருந்தது. மகன்,
முதலில் அடிமைத்தனமே வழக்கமாகிவிடுமோ என்ற அபாயகரமான நிலை இருந்தது. ஆனால், சிறிது சிறிதாக மக்கள் மனதில் விடுதலைக்கான வேட்கை தொடங்கியது. அஞ்சி வாழ்ந்தால் அடிமைத்தனம் நிலையாகிவிடும் என்பதை புரிந்துகொண்ட மக்கள், குரல் எழுப்பி உரிமை முழக்கம் செய்யத் தொடங்கினர். நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் அரசியல் செய்வதை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குட்ட குட்ட எழுந்தனர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் ஆயுத பலமும், ஆள் பலமும் இருந்தது. இந்திய சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களிடம் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணமும் நாட்டுப்பற்றும் மட்டுமே இருந்தன. இவற்றையே தங்கள் உந்துசக்தியாக்கி உத்வேகத்துடன் போராடினர்.
இறுதியாக, பலரது தியாகத்தின் விளைவாக இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர போராட்ட வரலாற்றை இன்று கதையாய் படிக்கிறோம். பலர் போராடி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பேணிக்காக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
சுதந்திரம் என்பது வெறும் சொல்லோடு இல்லாமல், நம் வாழ்விலும், உணர்விலும், உயிரிலும் பின்னிப்பிணைந்துள்ளது. இன்றைய சந்ததியினர் நம் சுதந்திர வரலாற்றை நெஞ்சில் கொண்டு, நம் நாடு தினம் தினம் அடைந்துவரும் முன்னேற்றத்தின் பெருமை கொண்டு, நாட்டுப்பற்றுடன் நாட்டு முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். புதிய பாரதம் என்பது தானாக உருவாகாது. நாம் அனைவரும் அதில் பங்குகொண்டு அதை உருவாக்க வேண்டும்.
சுதந்திரத்தை போற்றுவோம்.... இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ