பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் இடங்களை இந்திய ராணுவம் அழித்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்தியா தொழில்நுட்பங்கள் உதவியுடன் தடுத்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இன்று அதிகாலையில் இந்தியா முழுவதும் உள்ள 26 இடங்களை பாகிஸ்தான் டார்கெட் செய்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள நான்கு விமான தளங்களை இந்தியா வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் எல்லை பகுதிகளில் துப்பாக்கி சூடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர்: ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகளுக்கு தடையா?
இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. இவற்றை கண்டறிந்து சுட்டு வீழ்த்தி உள்ளது இந்திய ராணுவம். பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. ஃபெரோஸ்பூரில் உள்ள பகுதியில் ட்ரான் தாக்கியதில் உள்ளூர் மக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் சார்பில் அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறையடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் பகுதியில் உள்ள குடிமக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பீதி தேவையில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம் என்று இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் புகையை காண முடிகிறது. கடந்த 2 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பும் தாக்கி அகற்றப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: 1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ