India Pakistan War: ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் தொடுத்த நிலையில், இந்தியா அதனை மீண்டும் முறியடித்துள்ளது.
India Pakistan War: தொடரும் தாக்குதல் முயற்சி, முறியடிக்கும் இந்தியா
ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் அவை அனைத்தும் S-400 வான் தடுப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டன. இந்திய விமானப்படை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விமான நிலையம் ஆளில்லா விமானங்களால் சூழப்பட்டுள்ளது. பல ஏவுகணைகள் வான் தடுப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டன.
Breaking: India brings down Pakistani drones attacking Jammu. First videos of the attack: https://t.co/gl8UnCQ71F pic.twitter.com/7j6cYryWIx
— Sidhant Sibal (@sidhant) May 8, 2025
India Pakistan War: வீடியோவை வெளியிடும் பொதுமக்கள்
பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மூலம் ஜம்முவில் தாக்குதல் தொடுக்க முயற்சித்த நிலையில், அங்கு சைரன்கள் ஒலிக்கின்றன, ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டன. அங்கு முற்றிலும் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் அதன் சுற்றிய உள்ள நகரங்களில் இருந்து மக்கள் வானில் தெரியும் டிரோன்களில் இடைமறிப்பை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜம்முவில் மட்டுமின்றி அடுத்து பதான்கோட் ராணுவ தளத்திலும் தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது.
Friends in Jammu tell me that the sky has turned red with attacking Pakistani drones. https://t.co/gl8UnCQ71F pic.twitter.com/xei729nt8C
— Sidhant Sibal (@sidhant) May 8, 2025
India Pakistan War: ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் பதற்றம்
இன்று இரவு 9 மணிக்கு சற்று முன்பு, நகரத்தில் இருந்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக மக்களை எச்சரிக்கை வகையில் சைரன் ஒலிகள் ஒலிக்கப்பட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. செல்போன் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜம்முவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள குப்வாரா மற்றும் பதான்கோட் ஆகிய நகரங்களிலும் பாகிஸ்தான் தொடுத்த தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியின் பெரும்பகுதி இப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே உள்ள பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கும் வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் ஜெய்சல்மார் நகரின் மீது பாகிஸ்தானின் தொடுத்த தாக்குதல் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு ஏர்போர்ட் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையமும் தற்போது உஷார் படுத்தப்பட்டுள்ளது.
India Pakistan War: 3 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளது
இந்தியாவின் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய ராணுவத்தின் வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தையும், 2 JF-17 விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளது. போர் விமானங்கள் மட்டுமின்றி, பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் இந்தியா முறியடித்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









