இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்ட பாகிஸ்தான்... நடந்தது என்ன?

India Pakistan War: இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்-டொனால்ட் டிரம்ப்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2025, 06:48 PM IST
  • இந்தியா பாகிஸ்தான் போர்.
  • போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதா?
  • முழு விவரம் இதோ.
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்ட பாகிஸ்தான்... நடந்தது என்ன?

India Pakistan War:இந்தியா பாகிஸ்தான் இடையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுடன் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி இதை உறுதிபடுத்தினார்.

இது குறித்து வெளியுறவு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இன்று அதிகாலை 3.35 மணிக்கு இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை அழைத்தார். இன்று இந்திய நேரப்படி 1700 மணி முதல் இரு தரப்பினரும் நிலத்திலும், வான்வழி மற்றும் கடலிலும் அனைத்து வித போர் ஆயுத மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் மே 12 ஆம் தேதி 1200 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்.' என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் X பதிவில் போட்ட ட்வீட் கவனத்தை கவர்ந்தது.  

'இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது X பதிவில் கூறியுள்ளார். இதை செய்தி ஊடகங்களான ANI மற்றும் ராய்ட்டர்ஸும் வெளியிட்டுள்ளன..

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், 'பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது.' என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுடன் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி, இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் ட்வீட்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ட்வீட் செய்து, "கடந்த 48 மணி நேரத்தில், துணை ஜனாதிபதி வான்ஸும் நானும் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர், ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் அசிம் மாலிக் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடி போர்நிறுத்தத்திற்கும், நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம் மற்றும் அரசியல் திறமையை நாங்கள் பாராட்டுகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக சமூக ஊடக தளமான X -இல் பதிவிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 'போர் ஆயுத தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும்"  என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | India Pakistan Ceasefire: போர் நிறுத்தத்தை உறுதிசெய்த இந்தியா... மே 12இல் மீண்டும் பேச்சுவார்த்தை!

மேலும் படிக்க | LIVE : முடிவுக்கு வந்தது இந்தியா-பாகிஸ்தான் மோதல்! அடுத்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News