India Pakistan War: இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் தங்கள் ஆதரவை தெளிவுபடுத்தி வருகின்றன. இந்தியாவின் அண்டை நாடான சீனா பாகிஸ்தான் பக்கம் தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. எனினும் சீனா தன்னை நடுநிலையாக காட்டிக்கொள்ள பலவித முயற்சிகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக சீனாவிடைருந்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்கள் தேவையான நேரத்தில் திறம்பட செயல்படாததால் பாகிஸ்தான் கடும் கோவத்தில் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான தனது ஆதரவை காட்டிக்கொள்ளாமல் தூது போகும் அமைதி புறாவாக சீனா நடித்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் நேற்று கூறுகையில், “நேற்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து சீனா கவலை கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், எப்போதும் அவை அப்படியே இருக்கும். அவை இரண்டும் சீனாவின் அண்டை நாடுகளும் கூட. சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும், அமைதியைப் பேணவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தற்போதுள்ள பதட்டங்களைத் தணிப்பதில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க சர்வதேச சமூகத்தின் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றார்.
On India-Pakistan tension, Chinese Foreign Ministry Spokesperson Lin Jian yesterday said, "We’ve shared China’s position yesterday on the ongoing situation between India and Pakistan. China is concerned over the current developments. India and Pakistan are and will always be each… pic.twitter.com/ay1zuOgWzV
— ANI (@ANI) May 9, 2025
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து அமெரிக்கா கூறுவது என்ன?
மறுபுறம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு போரில் ஈடுபடப்போவதில்லை என்று கூறியுள்ளது. வியாழக்கிழமை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், அமெரிக்காவால் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அணு ஆயுத பலம் கொண்ட இந்த அண்டை நாடுகளிடம் பதட்டங்களைக் குறைக்க முறையிட முடியும் என்று கூறினார்.
"அணுசக்தி நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டால் ஒரு பெரிய மோதல் வெடிக்கக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று வான்ஸ் கூறினார். பதற்றம் விரைவில் குறைய வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாக வான்ஸ் மேற்கோள் காட்டினார். "இந்த நாடுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பாகிஸ்தான் மீது இந்தியாவுக்கு சில புகார்கள் உள்ளன. பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலளித்துள்ளது. பதற்றத்தை கொஞ்சம் குறைக்க முயற்சிக்குமாறு இவர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கலாம், ஆனால் இந்த போரின் நடுவில் இறங்கப் போவதில்லை. உண்மையில் எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரிக்கும் பதற்றம்
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத கூடாரங்கள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சகம், "ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள இராணுவ நிலைகள் இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டன. நிறுவப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு இணங்க, 'கைனடிக்' மற்றும் 'நான்-கைனடிக்' திறன்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்கள் விரைவாக தகர்க்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ராஜஸ்தான் எல்லையில் ரெட் அலர்ட்: மக்கள் வெளியேற்றம், அடுத்து என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









