India Pakistan War: இந்தியா பாகிஸ்தான் இடையில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏவுகணைகளும் களத்தில் இறங்கியுள்ளன. பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், பாகிஸ்தான் செய்வதறியாமல் தவித்து வருகின்றது.
தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முற்றிலுமாக மோசமாக்கியுள்ளன. இதற்கிடையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களின் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
'நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற வகையிலான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரஸின் காசா கான்ட் மீது பல எதிரி ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் பறந்து செல்வது காணப்பட்டது. எதிரியின் இந்த ஆளில்லா விமானங்கள் உடனடியாக நமது வான் பாதுகாப்புப் பிரிவுகளால் அழிக்கப்பட்டன.
இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதற்கும் பாகிஸ்தானின் இந்த அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. #IndianArmy எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும்.' என்று இந்திய ராணுவம் தனது X பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
OPERATION SINDOOR
Pakistan’s blatant escalation with drone strikes and other munitions continues along our western borders. In one such incident, today at approximately 5 AM, Multiple enemy armed drones were spotted flying over Khasa Cantt, Amritsar. The hostile drones were… pic.twitter.com/BrfEzrZBuC
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 10, 202
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பஹல்காமில் அப்பாவி இந்தியர்களை கொன்றதே இந்த சூழலுக்கான முக்கிய காரணம். முன்னதாக பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தானின் பயங்கரவாத கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல்களை அதிகப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் இந்தியா தெளிவாக கூறியது. ஆனால், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அத்துமீறல்கள் நடந்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் இந்தியா குறிப்பிட்டிருந்தது.
ஆபரேஷன் பன்யான் உல் மாரூஸ்
ஆனால் பாகிஸ்தான் அடங்குவதாக இல்லை. பாகிஸ்தான் இந்திய ராணுவ தளங்களையும் அப்பாவி சிவிலியன் மக்களையும் தாக்கத்தொடங்கியது. அதன் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலளிக்கும் விதமாக, தற்போது பாகிஸ்தான் 'பன்யான் உல் மாரூஸைத்' தொடங்கியது.
மேலும் படிக்க | எரிபொருள் பற்றாக்குறை! அடுத்த 48 மணி நேரத்திற்கு மூடப்படும் பெட்ரோல் பங்குகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ