India Pakistan War: இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், பாகிஸ்தான் செய்வதறியாமல் தவித்து வருகின்றது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே, பாகிஸ்தானின் பயங்கரவாத கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல்களை அதிகப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் இந்தியா தெளிவாக கூறியது. மேலும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அத்துமீறல்கள் நடந்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.
ஆனால் பாகிஸ்தான் அடங்கவில்லை. சிவிலியன் மற்றும் ராணுவ தளங்களை தாக்க துவங்கியது. அதன் பின் இந்தியா கொடுத்து வரும் பதிலடியால் பாகிஸ்தான் ஆட்டம்கண்டுள்ளது. எனினும், அது தனது சில்மிஷங்களை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆபரேஷன் சிந்தூரால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எல்லை நகரங்களை குறிவைக்க முயற்சித்து வருகிறது. வியாழக்கிழமை இரவு, ஜம்மு-காஷ்மீர் உட்பட பல்வேறு நகரங்களை பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க முயன்றது.
இது இந்திய ராணுவத்தின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டது. இதற்கு முந்தைய இரவு கூட, இந்தியாவின் 15 நகரங்களில் உள்ள ராணுவ தளங்களைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் அது இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டது. -
இது தவிர ஜம்மு-காஷ்மீரின் சம்பாவில், ஊடுருவ முயன்ற பல ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இது ஒரு பெரிய வெற்றியாகும். வான்வழித்தாக்குதலில் அனைவரது கவனமும் இருந்த நிலையில், ஊடுருவ முயன்ற இந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய நாசவேலைக்கான திட்டத்துடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது மிகப்பெரிய நற்செய்தியாக வந்துள்ளது.
பாகிஸ்தானுடனான தொடர்ச்சியான பதற்றத்திற்கு மத்தியில், இந்திய ராணுவம் ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த காணொளி நமது இராணுவம் பாகிஸ்தானின் ட்ரோனை ஒரு சில நொடிகளில் எவ்வாறு அழித்தது என்பதைக் காட்டுகிறது.
OPERATION SINDOOR
Pakistan Armed Forces launched multiple attacks using drones and other munitions along entire Western Border on the intervening night of 08 and 09 May 2025. Pak troops also resorted to numerous cease fire violations (CFVs) along the Line of Control in Jammu and… pic.twitter.com/WTdg1ahIZp
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 9, 2025
இதற்கிடையில், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் முதல்வரின் இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும், குறிப்பாக எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்து, தலைமையகத்தில் அறிக்கை செய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | இந்தியா பாகிஸ்தான் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா? அமெரிக்கா ரியாக்ஷன்
மேலும் படிக்க | Ind Pak War: யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









