)
Operation Sindoor Latest News: காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டது. மே 7 ஆம் தேதி, அதிகாலை சுமார் 1:30 மணியளவில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. இதில் இதுவரை சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் எதுவும் வரவில்லை.
'ஆபரேஷன் சிந்துார்' -இன் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாத கூடாரங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது இந்தியா. பாகிஸ்தான் ராணுவ தளங்களோ, பொது மக்கள் வசிக்கும் பிரதான இடங்களோ, பாகிஸ்தானின் பிற முக்கிய நிறுவனங்களோ தாக்கப்படாமல், இந்தியா மிகுந்த கனவத்துடன் தனது இலக்கை தேர்வு செய்துள்ளது. தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, எதிரி நாட்டிற்குள் புகுந்து அடிக்க இந்தியா தயக்கம் காட்டாது என்பதை இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் இந்தியா மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது.
பாகிஸ்தானில் அவசரநிலை
இந்திய படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் உட்பட பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?
இந்தியா நடத்திய இந்த வான்வழித் தாக்க்குதலுக்குப் பிறகு, உலகம் முழுவதிலுமிருந்து பல கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்வினைகள் வந்துள்ளன. "நிச்சயமாக இப்படி ஏதாவது நடக்கும் என்ற எண்ணம் மக்களுக்கு இருந்தது. இவை அனைத்தும் விரைவில் முடிய வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் சக்திவாய்ந்த நாடுகள். இந்த இரண்டு அணு ஆயுத நாடுகளும் போரை நோக்கி நகர்வது நல்லதாக இருக்காது. இன்றைய உலகம் போரை அல்ல, அமைதியையே விரும்புகிறது." என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ X இல் ட்வீட் செய்து, "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். இந்த விஷயம் விரைவில் முடிவுக்கு வரும். அமைதியான தீர்வுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைகளுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்." என்று பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ