India Pakistan War, Blackout : பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த நிலையில், அதற்கு பதில் தாக்குதலை தொடுக்க தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஜம்மு காஷ்மீர், பதான்கோட், உதம்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்தி வரும் சூழலில் இந்தியா அதிநவீன போர்க்கருவிகள் மூலம் அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தியது. வான்வழிப் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்திய விமானத்துறை முழு வீச்சில் ஆக்டிவேட் செய்துவிட்டது. அதனால், பாகிஸ்தானில் இருந்து பொழியும் டிரோன் தாக்குதல்கள் எல்லாம் பாதியிலேயே இடைமறித்து இந்தியாவால் சுட்டுவீழ்த்தப்பட்டு வருகின்றன.
பிளாக் அவுட் என்றால் என்ன?
ஏறத்தாழ இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப் வரை பாகிஸ்தான் எல்லையோரம் இருக்கும் அனைத்து பகுதிகளும் பவர் பிளாக்அவுட் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்துள்ளது. பலருக்கும் பிளாக்அவுட் என்றால் என்ன யோசிக்கக்கூடும். அதாவது, போரின்போது எதிரிகளுக்கு வெளிச்சமின்மையை ஏற்படுத்துவது, அதாவது அனைத்து மின் விளக்குகளையும் அனைப்பது ஆகும். மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை பிளாக்அவுட் பகுதிகளில் மின்சாரம் கொடுக்கப்படாது. இதன்மூலம் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கவும், பதில் தாக்குதலை தொடுக்கவும் ராணுவத்துக்கு உதவியாக இருக்கும். மின்விளக்குகள் மூலம் முக்கிய இடங்களை அடையாளம் காண முடியும் என்பதால் போரின்போது இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் எச்சரிக்கை
பொதுமக்கள் அனைவரும் மின்விளக்குகளை அனைக்குமாறு ஜம்மு காஷ்மீர் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் பயணம் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக அந்நாட்டுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலில் சுமார் 70க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
பாகிஸ்தான் ரியாக்ஷன்
இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என அந்நாட்டு பிரதமர் அறிவித்தார். ஆனால், இந்தியா லேட்டஸ்டாக கொடுத்த எச்சரிக்கையில், தீவிரவாத முகாம்களை மட்டுமே இந்தியா தாக்கியதாகவும், பதிலடி மட்டுமே கொடுத்தாகவும் விளக்கம் அளித்தது. மேற்கொண்டு பாகிஸ்தான் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் என இந்தியா எச்சரித்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும் படிக்க | பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி... வெளியேறும் பார்வையாளர்கள்... போர் பதற்றம் காரணமா?
மேலும் படிக்க | ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானை குறிவைக்கும் பாகிஸ்தான்... தொடர்ந்து முறியடிக்கும் இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









