India S-400 vs Pakistan HQ-9: மே 7ஆம் நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவின் 15 நகரங்களில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை நோக்கி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இதனை இந்திய ராணுவம் இன்று உறுதிப்படுத்தியது.
India vs Pakistan: பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா
ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் தொடுக்க பாகிஸ்தான் முயற்சித்ததாகவும், இந்தியாவின் S-400 ஏவுகணைகள் கொண்டு அவை முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் இன்று காலை பாகிஸ்தானுக்குள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது என தெரிவித்துள்ளது.
25 ஹரான் ரக டிரோன்களை கொண்டு பாகிஸ்தானின் 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7 மற்றும் மே 8 இரவு நேரத்தில் இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் லாகூர் வான் தடுப்பு அமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
India vs Pakistan: S-400 vs HQ-9
இந்திய விமானப்படை S-400 சுதர்சன சக்கர வான் தடுப்பு ஏவுகணை அமைப்பை வைத்துள்ளது. இதைக்கொண்டே, நேற்று பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டதாகும். அதேநேரத்தில், பாகிஸ்தான் HQ-9 எனும் வான் தடுப்பு ஏவுகணை அமைப்பை வைத்துள்ளது. இது சீன தயாரிப்பாகும்.
பாகிஸ்தானின் இந்த அமைப்பைதான் லாகூரில் முற்றிலும் சேதப்படுத்திவிட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அதன் ஆயுத தேவைக்கு சீனாவையே அதிகம் நம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், வான் தடுப்பு அமைப்பின் மீதான இந்தியாவின் அதிரடி தாக்குதல் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.
India vs Pakistan: பாகிஸ்தானின் HQ-9 அமைப்பு
எதிரி நாடுகளின் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகளிடம் இருந்து தனது எல்லையைப் பாதுகாக்க பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து இந்த HQ-9 வான் தடுப்பு அமைப்பை பெற்றுள்ளது. ரஷ்யாவின் S-300 அமைப்பை அடிப்படையாக வைத்தே சீனா இந்த HQ-9 வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இது இந்தியா பயன்படுத்தும் S-400 ஐ விட பலவீனமான வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பு என்பதை இங்கு கூற வேண்டும். HQ-9 வான் தடுப்பு அமைப்பு 200 கி.மீ., ரேடார் கண்டறிதல் வரம்பையே கொண்டுள்ளது. அதாவது, எளிய தாக்குதல்களை சமாளிக்க இது போதுமானது என்றாலும், இந்த HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு கப்பல் ஏவுகணைகள், நீண்ட தூரம் பயணிக்கும் பெரிய ஏவுகணைகளை, போர் விமானங்கள் ஆகியவற்றையும் முறியடிக்கும் என சீனா கூறுகிறது. ஆனால் இது கப்பல் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை மட்டும் முறியடிப்பதற்கே இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிஸ ஊடக தகவல்கள் கூறுகின்றன.
India vs Pakistan: இந்தியாவின் S-400 அமைப்பு
உலகின் மிக வலிமையான வான் தடுப்பு அமைப்புகளில் S-400 ஏவுகணைகளும் ஒன்றாகும். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இவை, எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், அதிக தூரம் பயணிக்கும் பெரிய ஏவுகணைகளை கூட முறியடிக்கக் கூடியதாகும். இந்த S-400 என்பது 400 கி.மீ., தூரம் வரை உள்ள எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது, இதில் 4 வகையான ஏவுகணைகள் பயன்படுத்தப்பபடுகிறது. சீனா, பாகிஸ்தானை கருத்தில்கொண்டு இந்தியா இந்த வான் தடுப்பு அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது.
S-400 வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே 5 முறை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியா இதுவரை மூன்று S-400 அமைப்புகளை பெற்றுள்ளது. S-400 பிரிவில் லாஞ்சர்கள், ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ஆதரவு வாகனங்கள் உள்ளிட்ட 16 வாகனங்கள் உள்ளன. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் 'முழு பேட்டரி' என்று அழைக்கப்படுகிறது. இந்த S-400 வான் தடுப்பு அமைப்பின் சிறப்பே இது 600 கிமீ தொலைவில் உள்ள இலக்கைக் கண்காணித்து 400 இலக்கு வரம்பிற்குள் தாக்கும். இது 120 கிமீ, 200 கிமீ, 250 கிமீ மற்றும் 400 கிமீ ஏவுகணைகள் என 4 ஏவுகணைகளை கொண்டுள்ளது.
India vs Pakistan: சீனாவும் S-400 வைத்திருக்கிறது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானுக்கு தான் தயாரித்த HQ-9 வான் தடுப்பு அமைப்பை வழங்கிய சீனா, தனக்கு என ரஷ்யாவிடம் இருந்து S-400 அமைப்பையும் வாங்கி இருக்கிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தானை பயமுறுத்தும் டிரோன் தாக்குதல்.. யார் காரணம்? இந்தியா மீது குற்றச்சாட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









