Rafale M Fighter Jets: கடந்த செவ்வாய்கிழமை (ஏப். 22) ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது.
இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போர் மேகங்கள் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Rafale M Fighter Jets: இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம்
இது ஒருபுறம் இருக்க, இந்தியா பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63 ஆயிரம் கோடி மதிப்புள்ள 26 Rafale M ஃபைட்டர் ஜெட் எனப்படும் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தமிட்டுள்ளது. இது இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட இருக்கும் கடல்சார் விமானம் ஆகும்.
22 ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானங்கள் மற்றும் 4 இரட்டை இருக்கை கொண்ட விமானங்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தாகி உள்ளது. ஆனால், இவை அனைத்தும் 2031ஆம் ஆண்டில்தான் இந்தியாவுக்கு வந்துசேரும். இந்த ஒப்பந்தம் விமானம் வாங்குவதற்கு மட்டுமின்றி, கடற்படை பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர் பயிற்சி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
Rafale M Fighter Jets: சிறப்பம்சங்கள் என்னென்ன?
Rafale M தான் உலகின் மிகவும் மேம்பட்ட கடற்படை போர் விமானங்களில் ஒன்றாக பரவலாக கருதப்படுகிறது. தற்போது பிரான்ஸ் நாட்டின் கடற்படையிடம் மட்டுமே இந்த போர் விமானம் உள்ளது. இந்த விமானங்களில் Safran குழுமத்தின் வலுவூட்டப்பட்ட தரையிறங்கும் கியர்களைக் கொண்டுள்ளது. இந்த கியர்கள் கேரியர் இணக்கமான விமானங்களுக்கு சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் மடிப்பு வகையிலான இறக்கைகள், கடுமையான நிலைமைகளைத் தாங்கும் வலுவூட்டப்பட்ட அண்டர்கேரேஜ் போன்றவற்றையும் கொண்டுள்ளது.
Rafale M Fighter Jets: வலுவாகும் கடல்சார் சக்தி
இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இந்த Rafale M போர் விமானங்கள் பயன்படுத்தப்படும். இவை கடல்சார் சக்தியை வலுப்படுத்தி இந்தியப் பெருங்கடலில் வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் எனலாம். கடற்படை நீண்ட காலமாக பயன்படுத்தப்படும், பழைய MIG-29K பதிலாக Rafale M கொண்டுவரப்பட உள்ளது.
தற்போது Rafale M ரக போர் விமானங்களை இந்திய கடற்படை வாங்க திட்டமிட்டுள்ள சூழலில், இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை இயக்கி வருகிறது. மேலும் கடற்படை வகைகளை கையகப்படுத்துவதன் மூலம் இந்திய விமானப்படையின் திறன்களையும் மேம்படுத்தும் எனலாம்.
மேலும் படிக்க | பாகிஸ்தானுடனான வர்த்தக உறவில் விரிசல்! இந்தியாவில் என்னென்ன பொருட்களின் விலை உயரும்!
மேலும் படிக்க | 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம்.. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்!
மேலும் படிக்க | இந்தியாவில் ரத்த ஆறு ஓடும்.. சீண்டும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









