India Pakistan War: பாகிஸ்தானின் தொடர் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லாகூர், கராச்சி, சியால்கோட், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நான்கு நகரங்களில் இந்தியா பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானின் லாகூர் நகரத்தின் மீது இந்தியா பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பெரிய இலக்காகவும் பார்க்கப்படுகிறது. முன்னதாக, லாகூரில் உள்ள வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை இன்று காலை நடத்தியிருந்தது. அதன்மூலம், அதன் ரேடார் அமைப்பு மற்றும் பிற துணை அமைப்புகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
ஒரு ரேடார் அமைப்பைத் தாக்கி அதனை நிர்மூலமாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ஹார்பி டிரோன், எதிரியின் வான் தடுப்பு பாதுகாப்பு (SEAD) பங்கை அடக்குவதன் மூலம் எந்தவொரு வான் போரிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கதிர்வீச்சு எதிர்ப்பு (AR) தேடுபொறியுடன் பொருத்தப்பட்ட இது, பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தும் வெடிபொருளை கொண்டிருக்கும். பாகிஸ்தான் அரசு முழு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், லாகூர், சியால்கோட், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளிலும் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் இன்றிரவு இந்தியாவின் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் தாக்குதல் தொடுக்க முயற்சித்த நிலையில், அனைத்தையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும், பாகிஸ்தானின் போர் விமானங்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. தொடர்ந்து தற்போது F-16 போர் விமானத்தின் பாகிஸ்தான் விமானி, ஜம்முவின் அக்னூர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ். புரா பகுதியில் இருந்து கடுமையான பீரங்கி தாக்குதல்கள் நடந்தது வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள குப்வாரா மற்றும் பாரமுல்லாவில் அருகே பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய ராணுவம் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகிறது. சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் எட்டு ஏவுகணைகளை ஏவியது. இவை அனைத்தும் இந்தியாவின் எஸ்-400 வான் தடுப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டன.
பாகிஸ்தான் எதிர் தாக்குதல்! தமிழ்நாட்டில் எந்த எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படும்?
இந்தியா - பாகிஸ்தான் போர்: பாதியில் ரத்தாகும் ஐபிஎல் தொடர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









