இந்திய விமானப்படை அதிகாரி அதித்யா போஸ் மற்றும் அவரது மனைவி மதுமிதா ஆகியோர் நேற்று (ஏப்ரல் 20) மாலை பெங்களூரு விமான நிலையம் நோக்கி சென்று உள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்த பைக் ஓட்டுநர் கன்னடத்தில் திட்டி உள்ளார். சிறுது நேரத்தில் இது கைகலப்பாக மாறி உள்ளது. இதில் அதிகாரி அதித்யா போஸ் காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விமானப்படை அதிகாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறார். அவரது நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் காயம் இருப்பதாக வீடியோவில் தெரிகிறது. அந்த வீடியோவில் அதித்யா போஸ் கூறியதாவது, நான் தற்போது விமான நிலையத்தில் இருக்கிறேன். இன்று காலை என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் காலை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். கொல்கத்தாவிற்கு செல்வதற்காக விமான நிலையம் சென்றேன்.
அப்போது கோபாலன் கிரண்ட் மால் அருகே திடீரென பைக்கில் வந்தவர்கள் எங்களை திட்டினர். காரின் முன்பு பைக்கை நிறுத்தி எங்களை கன்னடத்தில் திட்டினர். காரில் டிஆர்டிஓ ஸ்டிக்கரை பார்த்ததும் இன்னும் கோபமடைந்து எங்களை திட்டவும் அடிக்கவும் தொடங்கினர். கீழே இறங்கி அவர்களை எதிர்கொண்ட போது என்னை சாவியை வைத்து அடித்தனர். பின்னர் காரின் மீது கல்லை எறிந்து மீண்டும் தாக்கினர். இதைவிட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அங்கே இருந்த பொதுமக்கள் யாரும் உதவவில்லை. மாறாக அவர்கள் கன்னடம் பேசி தாக்குதல் செய்த கும்பலுக்கு சப்போர்ட் செய்தனர் என அந்த வீடியோவில் போஸ் நடுங்கியபடி கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலர், தேசத்திற்காக சேவை செய்யும் ஒருவரை இப்படி தாக்கியது வருத்தம் அளிக்கிறது. தேசத்திற்காக பணியாற்றும் வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், டிஆர்டிஓ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: மறைந்த போப் பிரான்சிஸின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









