)
Operation Mahadev: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, இந்திய ராணுவத்தின் Chinar Corps அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது" என குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், தொடர்ந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
Operation Mahadev: அதிகம் தேடப்பட்ட 3 பயங்கரவாதிகள்
ஜம்மு & காஷ்மீரில் உள்ள லிட்வாஸ் என்ற குடியிருப்பு பகுதியில் இந்திய ராணுவத்தின் சினார் படையினர் பயங்கரவாத எதிர்ப்பு 'ஆபரேஷன் மகாதேவ்'-ஐ தொடங்கியது. கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிக மதிப்பு கொண்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Contact established in General Area Lidwas. Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/xSjEegVxra
Indian Army (@ChinarcorpsIA) July 28, 2025
ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் படையினருக்கு உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் ஹர்வானின் முல்னார் பகுதியில் இந்த ஆபரேஷனை தொடங்கினர். அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும் அங்கு சோதனையும் நடைபெற்று வருகிறது.
Operation Mahadev: பகல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 பேர்
இன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத், பகல்காம் தாக்குதல் குறித்து விரிவாக விளக்கம் அளித்துக்கொண்டிருந்த அதே வேளையில், இந்த ஆபரேஷன் மகாதேவ்-ஐ பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த மூவரில் இரண்டு பேர் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட இந்த மூவரில் ஒருவர் சுலேமான் ஷா என்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியும் ஒருவர். இவர்தான் பகல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஆவார். உயிரிழந்த மற்ற இருவர் அபு ஹம்சா மற்றும் யாசிர் ஆகியோர் என கண்டறியப்பட்டுள்ளது. யாசிர் என்பவரும் பகல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Suleman Shah: யார் இந்த சுலேமான் ஷா?
சுலேமான் ஷா, பாகிஸ்தான் ராணுவத்திலும் பணியாற்றி இருக்கிறார். மேலும் அவருக்கு ஹாஷிம் மூசா என்ற பெயரும் உள்ளது. பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை சுலேமானை குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. பகல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ