இந்திய ரயில்வே, நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக உள்ளது. பலரும் பேருந்து மற்றும் விமான பயணத்தை விட ரயில் பயணத்தை விரும்புகின்றனர். சரியான நேரத்தில் ஒரு இடத்திற்கு சென்று விடலாம், அதே சமயம் குறைந்த விலையில் பயணம் செய்யலாம் போன்ற வசதிகள் உள்ள காரணத்தால் ரயில் பயணத்தை பலரும் விரும்புகின்றனர். அதிகமான பயணிகளை கொண்ட இந்திய ரயில்வே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. பயணிகள் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரயில்களில் மற்றும் தண்டவாளங்களில் குப்பை கொட்டுவது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க - ரயிலில் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? இந்த 5 விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
என்ன விதிகள் புதியதாக உள்ளன?
ரயில் பயணத்தின்போது உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பிற குப்பைகள் ஆகியவற்றை ரயிலின் சன்னல்களில் வழியாக வெளியே வீசுவது அல்லது ரயிலின் உள்ளே போடுவது தவறான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த அபராதத் தொகை, பயணிக்கும் வகை மற்றும் குப்பையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
யார் கண்காணிக்கின்றனர்?
இந்த விதிமுறைகளை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கமெராக்களும் கண்காணிப்பில் பங்கெடுக்கின்றன. கடந்த சில மாதங்களில், பல பயணிகளுக்கு நேரடியாக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செகுந்தராபாத் ரயில் நிலையத்தில் ஒருவர் தண்டவாளத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை வீசியதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், டெல்லியில் வந்தே பாரத் ரயிலில் பயணித்த இருவரும் குப்பையை சன்னலில் வீசியதால் தலா ரூ.1,500 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அபராதம் செலுத்தும் முறை எப்படி?
பயணிகள் அபராதத்தை ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் மூலம் அல்லது UPI, டிஜிட்டல் கட்டண வசதிகள் மூலம் செலுத்தலாம். செலுத்த மறுத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வேத் தரப்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்வச் பாரத் இயக்கத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டுள்ளன. பயோ டாய்லெட்கள், குப்பைத் தொட்டிகள், மற்றும் பயணிகளுக்கான அறிவிப்புகள் ஆகியவை தூய்மையை உறுதி செய்யும் முக்கிய பங்குகளை வகிக்கின்றன. மேலும், சுவரொட்டிகள், அறிவிப்புப் பலகைகள், டிஜிட்டல் திரைகள் போன்றவையும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ