)
Indian Railways, Train Ticket Price Hike: இந்தியன் ரயில்வே பல ஆண்டுகள் கழித்து அதன் ரயில்களின் டிக்கெட் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த விலை உயர்வு எந்தெந்த ரயில்களுக்கு, எவ்வளவு உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்து இங்கு காணலாம்.
Indian Railways: பயணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே எப்போதும் பயணிகளின் நலன் சார்ந்த முடிவுகளையே எடுக்கும் எனலாம். மற்ற போக்குவரத்துகளை விட ரயில் போக்குவரத்துதான் இந்தியர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கக் கூடியதாகும். எளிமையாகவும், ஓரளவுக்கு விரைவாகவும் ரயில்களில் பயணிக்கலாம். டுக்கை வசதி மற்றும் அமரும் வசதி கொண்ட ஏசி இல்லாத பெட்டிகள் தொடங்கி, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள், பெண்களுக்கான தனி பெட்டிகள் வரை பல்வேறு வசதிகள் உள்ளன. இவை அனைத்தும் முன்பதிவு பெட்டிகள் எனலாம்.
அதே நேரத்தில் முன்பதிவு இல்லாமல் பயணிக்கக் கூடிய வசதியையும் இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள்தான் இருக்கும். ஓரிரு பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும். அந்தோத்யா எக்ஸ்பிரஸ் ரயிலில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில், பயணிகள் ரயிலில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவில்லாததுதான்.
Indian Railways: டிக்கெட் விலை உயர்வு...?
இந்நிலையில், இந்தியன் ரயில்வே பயணிகள் ரயிலின் டிக்கெட் விலையைதான் தற்போது உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் மிக குறைந்த அளவில்தான் இந்த டிக்கெட் விலை உயர்வு இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏசி வசதி இல்லாத பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், பயணிகள் டிக்கெட் விலையை ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா அளவில் உயர்த்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். அதே நேரத்தில், ஏசி வகுப்பு டிக்கெட்டுகளின் விலையில் கிலோமீட்டருக்கு 2 பைசா அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாம்.
Indian Railways: ஜூலை 1ஆம் தேதி முதல்...
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், புறநகர் ரயில்களின் டிக்கெட் விலையோ, இரண்டாம் வகுப்பு ரயில்களின் டிக்கெட் விலையோ உயர்த்தப்படவில்லை. அதே நேரத்தில், 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் ரயில்களில் கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மாத சீசன் டிக்கெட்டுகளின் விலையிலும் எவ்வித மார்றமும் இல்லை. இவை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Indian Railways: IRCTC கணக்குடன் ஆதாரை இணையுங்கள்!
முன்னதாக, கடந்த ஜூன் 10ஆம் தேதி இந்தியன் ரயில்வே ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது, இனி தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய ஆதார் அட்டையை, IRCTC கணக்குடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது. இதுவும் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. போலி கணக்குகள் மற்றும் ஏஜெண்ட்கள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதை தவிர்க்கும்விதமாக இந்த முன்னெடுப்பை இந்தியன் ரயில்வே எடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ