)
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. தினசரி பல்வேறுக்கணக்கான மக்கள் ரயிலில் தான் பயணம் செய்கின்றனர். விரைவாகவும் அதே சமயம் குறைந்த கட்டணத்தில் செல்ல முடியும் என்பதால் பலரும் ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர். பயணிகளின் நன்மைக்காக இந்திய ரயில்வே சில விதிகளை அவ்வப்போது மாற்றி வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக இனி முன்பதிவு அட்டவணை (reservation chart) 4 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரத்துக்கு முன்பே வெளியிடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரயில்வேயில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கும் இடையே நடந்த தீவிர பேச்சு வார்த்தைக்கு பிறகு பயணிகளின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,"பயணிகளின் ரயில் பயணத்தை மேம்படுத்துவதற்கும், தேவையற்ற காலதாமதங்களை தவிர்ப்பதற்கும் ரயில்வே இந்த முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி இனி 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை அறிவிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை எளிதாக்கி கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "தற்போது முன்பதிவு அட்டவணை 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்படுகிறது. இருப்பினும் தட்கல் டிக்கெட் புக் செய்பவர்களுக்கும், டிக்கெட் உறுதிப்படுத்த படாதவர்களுக்கும் இது தொந்தரவாக இருந்து வருகிறது. ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றாலும், வெகு தொலைவில் இருந்து ரயில்களை பிடிக்க நினைப்பவர்களுக்கு இந்த நான்கு மணி நேரம் பல சிரமங்களை ஏற்படுகிறது. தங்களது டிக்கெட் உறுதி செய்யப்படுமா இல்லையா என்பது தெரியாமல் பலரும் ரயில் நிலையங்களுக்கு வந்து கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதி செய்யப்படாததால் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை குறைப்பதற்கு 4 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரத்திற்கு முன்பே பயன அட்டவணையை வெளியிடும் பட்சத்தில் இது பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்த மாற்றங்களை உடனடியாக இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. தட்கல் டிக்கெட் புக் செய்வதில் பல பிரச்சனைகளை பொதுமக்கள் சந்திப்பதால் இது தொடர்பான விதிகளை சமீபத்தில் மாற்றியது இந்திய ரயில்வே. அதன்படி, ஆதார் சரிபார்க்கப்பட்ட பயணிகள் மட்டுமே தட்கல் டிக்கெட்களை புக் செய்து கொள்ள முடியும் என்ற விதியை சமீபத்தில் அறிமுகம் செய்தனர் இதன் மூலம் பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ