India Pakistan War Latest Update : பகல்ஹாம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததற்கு, தக்க பாடம் புகட்ட நினைத்த பாகிஸ்தான் இப்போது பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது. ஏற்கனவே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போரிலும் ஈடுபட முனைந்திருப்பதால் அந்த நாட்டின் கஜானா படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் பொருளாதாரத்துறையின் எக்ஸ் அக்கவுண்டில் இருந்து இன்று காலை ஒரு பதிவு போடப்பட்டது. அதில், உலக நாடுகள் கடன் கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பாகிஸ்தான், தங்கள் நாட்டின் இறையாண்மையை காக்கவும், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதித்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியான இந்த பதிவு வைரலானது. அத்துடன் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போர் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளது என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே பாகிஸ்தான் நிதித்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் இப்படியான கோரிக்கை ஏதும் வைக்கவில்லை என்றும் அந்நாடு விளக்கமளித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் உண்மை கண்டறியும் துறை இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தங்களுக்கான நிதித்தேவையை பூர்த்தி செய்து கொள்ள உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு எதிரான இந்த தாக்குதலில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் எத்தகைய தாக்குதலை செய்தாலும் அதனை திறம்பட எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா, போர் தீவிரமானால் செய்ய வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் முழுவீச்சில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளிடம் பாகிஸ்தானை அம்பலப்படுத்தவும், இந்தியாவுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளவும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்பும்-பின்பும் பாகிஸ்தான்! வைரலாகும் புகைப்படம்..
மேலும் படிக்க | 1 பெண்ணை வைத்து பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா! யார் இவர்? முழு விவரம்..
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









