ஹனிமூன் கொலை: கைதான 3 பேரும் கூலிப்படை இல்லை... அப்போ? வெளியான ஷாக் தகவல்!

Indore Honeymoon Murder: நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், கொலை செய்தவர்களின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பெரும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 10, 2025, 01:18 PM IST
  • ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் கைது செய்யப்பட்டார்.
  • மேலும் 3 கொலையாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
  • சோனம் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஹனிமூன் கொலை: கைதான 3 பேரும் கூலிப்படை இல்லை... அப்போ? வெளியான ஷாக் தகவல்!

Indore Honeymoon Murder: மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (Raja Raghuvanshi) என்ற இளம் தொழிலதிபர், மேகாலயாவுக்கு தனது மனைவியுடன் ஹனிமூன் சென்றிருந்தார். மே 23ஆம் தேதியில் இருந்து இந்த தம்பதி காணாமல் போன நிலையில், குப்பை கொட்டும் இடத்தில் 10 நாள்களுக்கு பின் ராஜா ரகுவன்ஷி சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, கடந்த சில நாள்கள் முன்னர்தான் காணாமல் போன அவரது மனைவி சோனமை போலீசார் கைது செய்துள்ளனர். 

Indore Honeymoon Murder: திருமணத்தை மீறிய உறவில் இருந்தாரா சோனம்?

அதாவது, சோனம் (Sonam) திருமணத்தை மீறிய உறவில் இருந்ததன் காரணமாக, அவரது கணவரை கொல்லவே ஹனிமூனுக்கு திட்டமிட்டதாகவும், அதற்கு சோனம் மூன்று கூலிப்படை கொலையாளிகளை ஏற்பாடு செய்ததாக போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், சோனமிற்கு, ராஜ் குன்வன்ஹா என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாகவும், இந்த கொலையில் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். சோனமின் தந்தை போலீசாரின் கூற்றை முற்றிலும் மறுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Indore Honeymoon Murder: ரான் குஷ்வாஹாவின் 3 நண்பர்கள்

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் (Raja Raghuvanshi Murder Case) சோனம் மட்டுமின்றி கூலிப்படை கொலையாளிகள் என கூறப்படும் மூன்று பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த கொலையாளிகல் குறித்த விவரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இவர்கள் சோனம் ஏற்பாடு செய்த கூலிப்படை கொலையாளிகள் இல்லையாம், இவர்கள் அனைவரும் சோனமின் காதலர் என கூறப்படும் ராஜ் குஷ்வாஹாவின் (Raj Kushwaha) நண்பர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது நண்பனுக்காகவே இந்த மூன்று பேரும் சோனமின் கணவரை கொலை செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Indore Honeymoon Murder: யார் அந்த 3 பேர்?

சோனம் கடந்த சனிக்கிழமை அன்று உத்தர பிரதேசத்தின் காசிபூர் போலீசாரிடம் சரணடைந்ததாகவும், மற்ற மூன்று பேரும் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனாந்த் கும்ரி, ஆகாஷ் ராஜ்புத், விக்கி தாக்கூர் ஆகிய மூன்று பேர்தான் இந்த கொலையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 

23 வயதான ஆனந்த் கும்ரி உத்தர பிரதேசத்தின் பினா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான ஆகாஷ் ராஜ்புத் உத்தர பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். 22 வயதான விக்கி தாக்கூர் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் கைதாகி உள்ளார்.

Indore Honeymoon Murder: ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தது எப்படி?

கடந்த மே 11ஆம் தேதி ராஜா ரகுவன்ஷிக்கும், சோனமிற்கும் இந்தூரில் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து இவர்கள் மே 20ஆம் தேதி ஹனிமூனுக்கு மேகாலயாவுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளனர். இவர்கள் வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் ஆளரவமற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே அவர்கள் காணாமல் போனது தெரியவந்தது. அதை தொடர்ந்தே அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. 

சோனமின் காதலன் என கூறப்படும் ராஜ் குஷ்வாஹா கொலையாளிகளான தனது நீண்டநாள் நண்பர்கள் மூன்று பேரை இந்தூரில் உள்ள காபி ஷாப்பில் சந்தித்துள்ளார். அப்போது இந்த கொலை சம்பவத்தை செய்தால் பணம் தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே, ராஜ் அவரது நண்பர்களை மே 20ஆம் தேதி அன்று மேகாலயாவுக்கு அனுப்பி உள்ளார். ஆனால், ராஜ் மேகாலயா செல்லவில்லை. அவர் திரைமறைவில் இருந்து திட்டங்களை தீட்டியதாகவும், ராஜ் தொடர்ந்து சோனமுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஷில்லாங் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். கொலை நடந்த அன்று சோனம் அவரது கணவர் ராஜா ரகுவன்ஷியை ஆளில்லா சாலை ஒன்றுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கேயே அந்த மூன்று பேர் ராஜாவை கொலை செய்துள்ளனர்.

Indore Honeymoon Murder: பரபரப்பு சம்பவம்

10 நாள்களுக்கு பின் குப்பை கொட்டும் இடம் ஒன்றில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அங்கேயே கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அவருக்கு செய்யப்பட்ட உடற்கூராய்வில் இரண்டு இடங்களில் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்றும் தலையின் முன்புறமும், பின்புறமும் அவர் தாக்கி உள்ளார். அதேநேரத்தில் சோனமும் காணாமல் போனார். அவரை பல மாநிலங்களில் போலீசார் தேடி வந்தனர். அரசு தரப்பிலும் போலீசாருக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. 

சில வாரங்களுக்கு பின் 24 வயதான சோனம் உத்தர பிரதேசத்தின் காசிபூரில் உள்ள சாலையோர உணவகத்தில் கண்டறியப்பட்டார் என போலீசார் கூறுகின்றனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் போலீசாரிடம் சரணடைந்ததாகவும், அதன் பிறகே போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஹனிமூன் ஜோடி.. கணவன் கொலை.. மனைவி கைது..! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

மேலும் படிக்க | மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு: வைரல் ஆகும் திருமண வீடியோவில் மறைந்திருக்கும் தடயம்

மேலும் படிக்க | ஹனிமூனில் கணவர் கொலை; மனைவியே கொன்றது அம்பலம்.. சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News