)
புது டெல்லி: இந்திய ரயில்வே (Indian Railways) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கயில் சம்பளக் கணக்கைப் பராமரிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தனிநபர் விபத்து காப்பீடு உட்பட மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் ரயில்வே ஊழியர்களுக்கு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரூ.1 கோடி விபத்து மரண காப்பீடு: புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்குகளை பராமரிக்கும் ரயில்வே ஊழியர்கள் ரூ.1 கோடி விபத்து மரண காப்பீடு பெறுவார்கள்.
ரூ.10 லட்சம்: எந்த பிரீமியமும் செலுத்தவோ அல்லது எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமலேயே ரூ.10 லட்சம் இயற்கை மரண காப்பீடு திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
ரூ.1 கோடி: மேலும் விமான விபத்தில் பலியானால் ரூ.1.60 கோடி மற்றும் கூடுதலாக ரூபே டெபிட் கார்டில் ரூ.1 கோடி கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும்.
ரூ.80 லட்சம் காப்பீடு: விபத்தில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் ரூ.1 கோடி மற்றும் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டால் ரூ.80 லட்சம் காப்பீடு வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரயில்வே ஊழியர் நலன்: இந்திய ரயில்வே மற்றும் எஸ்பிஐ இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது ஊழியர் நலனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்பதை பிரதிபலிக்கிறது என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
நிதி பாதுகாப்பு: ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் நிதி பாதுகாப்பை வழங்குகிறது.
சுமார் 7 லட்சம் ரயில்வே ஊழியர்கள் தங்கள் சம்பளக் கணக்குகளை எஸ்பிஐயில் பராமரிப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ரயில்வே ஊழியர்களுக்கான புதிய தனிநபர் விபத்து காப்பீடு ரூ.1 கோடி என்பது, முன்னதாக குரூப் ஏ, பி மற்றும் சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1.20 லட்சம், ரூ.60,000 மற்றும் ரூ.30,000 காப்பீட்டு வரம்புகளிலிருந்து மிகப்பெரிய அதிகரிப்பாகும். அதுமட்டுமில்லாமல் கூடுதலாக எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.80 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீட்டையும் வங்கி வழங்குகிறது.
1. விமான விபத்து காப்பீடு (இறப்பு): ரூ.1.60 கோடி.
2. கூடுதலாக ரூபே டெபிட் கார்டில் ரூ.1 கோடி வரை கூடுதல் காப்பீடு
3. தனிப்பட்ட விபத்து (நிரந்தர மொத்த ஊனம்): ரூ.1 கோடி
4. தனிப்பட்ட விபத்து (நிரந்தர பகுதி ஊனம்): ரூ.80 லட்சம் வரை
5. தகுதியுள்ள எஸ்பிஐ டெபிட் கார்டுகளில் எஸ்பிஐ இலவச காப்பீட்டுத் தொகைகள் கிடைக்கின்றன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ