)
IPPB Recruitment 2025: இந்திய அஞ்சல் துறை என்பது நாட்டின் மிகப்பெரிய அரசு துறைகளில் ஒன்றாக உள்ளது. தபால் துறையில் வேலை கிடைக்க பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது தபால் துறையில் வேலை பார்க்க நினைப்பவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
இந்தியா முழுவதும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும், கேரளாவில் 06 பணியிடங்களும், கர்நாடகாவில் 19 பணியிடங்களும் என மொத்தம் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், மானாமதுரை, சென்னை, உடையார் பாளையம், தல்லாகுளம், தேனி, சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் தலா ஒரு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் முழுக்க முழுக்க தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அனுபவம் எதுவும் தேவையில்லை. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்திற்கு ஓராண்டு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். ஊழியர்களின் வேலை பொறுத்து, பணிகாலம் நீடிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிகிரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் IPPBonline.Com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதில் விண்ணப்ப படிவும் இருக்கும். அந்த விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2025 அக்டோபர் 29ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ