Bihar Assembly Election Result 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 67.13% வாக்குகள் பதிவான நிலையில், 1951ஆம் ஆண்டில் இருந்து பீகாரில் நடந்த அதிக வாக்குப்பதிவு இதுதான். அதிகளவில் வாக்குப்பதிவு நடந்திருப்பதால் ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகமாக இருக்கலாம் என்றும் ஆட்சி கைமாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
NDA In Bihar Election Result: என்டிஏ கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை
ஆனால், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் முன்னிலை நிலவரங்கள் அதற்கு எதிரான மனநிலையை வெளிக்காட்டுகிறது. தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவிட்டுள்ள தரவுகளில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 236 தொகுதிகளின் நிலவரம் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின்படி, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஐக்கிய ஜனதா தளம் 82 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது, அதே கூட்டணியில் உள்ள பாஜக 78 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. என்டிஏ கூட்டணி மட்டும் 187 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மகா கூட்டணி 47 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
NDA In Bihar Election Result: மகளிர் வாக்குகள்
ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரியளவுக்கு இல்லை என்பதையை தற்போதைய சூழல் வெளிக்காட்டுகிறது. பல்வேறு கருத்துக்கணிப்புகளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை கணித்திருந்தாலும் கூட, இந்தளவிற்கு பெரிய வித்தியாசத்தில் என்டிஏ வெற்றிபெறும் என ஓரிரு கருத்துக்கணிப்புகள் மட்டுமே கணித்தன. அதேநேரத்தில், இந்த தேர்தலில் மகளிர் 71.6% வாக்குகளை பதிவு செய்திருக்கின்றனர். மகளிர் வாக்குகள் தற்போது பெரிய அளவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது.
NDA In Bihar Election Result: ரூ.10 ஆயிரம் செய்யும் வேலை
ஏற்கெனவே, நிதிஷ் குமாருக்கு பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. பெண்களுக்கு சைக்கிள் கொடுத்தது, மது விலக்கை கொண்டுவந்தது, சட்ட ஒழுங்கை நிலைநாட்டியது என பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் பெரியளவில் கவனம் செலுத்தியிருக்கிறார். அப்படியிருந்தும், தேர்தல் நெருங்கிய நேரத்தில் சுமார் 1 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் முக்கியமந்திரி மஹிலா ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்தியது, நடப்பு தேர்தலில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது செயல்பாட்டில் இருந்த திட்டம் என்றும் அதனால் இது சட்டவிரோதம் என்றும் ஆளுங்கட்சி விளக்கம் அளித்தாலும், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன.
NDA In Bihar Election Result: என்டிஏ தேர்தல் வாக்குறுதிகள்
அடுத்து ஆட்சிக்கு வந்தால் மகளிரை லட்சாதிபதியாக்கும் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்பதும், சுயதொழில் மற்றும் சிறு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி அவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றுவோம் என்றும் தேசிய ஜனநாய கூட்டணி அதன் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ரூ.10 ஆயிரம் செலுத்தியது தாக்கம் செலுத்தினாலும் கூட, நிதிஷ் குமாரின் 20 ஆண்டுகால ஆட்சியே என்டிஏவுக்கு மீண்டும் வெற்றியை தேடி தந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
நிதிஷ் - மோடி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் பலமாக இருக்கும் காரணத்தால், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிமான இடங்களை கைப்பற்றிய ராஷ்டிரிய ஜனதா தளம் தற்போது 40க்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு முன் பிரச்சாரம் நிறைவடையும் தருணத்தில்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தேஜஸ்வி அறிவித்தார். இதை முன்கூட்டியே அறிவித்திருந்தால் கூட சிறிது தாக்கம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல்: யாருக்கு வெற்றி? ஓங்கும் காங்கிரஸ் 'கை' - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









