சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் ஒரு வதந்தி என்னவென்றால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 மார்ச் முதல் ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நிறுத்தவுள்ளதாக கூறப்படுவது தான். கேபிடல் டிவி என்ற யூடியூப் சேனல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பரவிய இந்த தகவல், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் போல 500 ரூபாய் நோட்டும் செல்லுபடி ஆகாதா என்று மக்கள் புலம்பி வந்தனர். ஆனால், மத்திய அரசு மற்றும் RBI இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளன. மேலும் ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த வதந்திகளின் உண்மைத்தன்மையையும், ஏன் இது போன்ற செய்திகள் வெளியாகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க - 4 வயது இரட்டை சகோதர-சகோதரிக்கு திருமணம்! பெற்றோர் செய்த செயல்..என்னங்க நடக்குது?

வதந்தியின் பின்னணி
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், வங்கிகள் மற்றும் ATM-களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியது. இதன்படி, வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் 75 சதவீதம் ஏடிஎம்களிலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 90 சதவீத ஏடிஎம்களிலும் குறைந்தபட்சம் ஒரு கேசட் மூலம் ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு ரூ. 100 மாற்று ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகள் கிடைப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியானது. ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்படுவதாக வதந்திகள் பரவின. சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸப்பில் ரூ.500 நோட்டுகள் 2026 மார்ச் மாதத்திற்குள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று பரவி வருகிறது
மத்திய அரசு வதந்திக்கு மறுப்பு
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவான பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB), இந்த கூற்றை தவறு என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, X தளத்தில் PIB வெளியிட்ட பதிவில், “ரிசர்வ் வங்கி இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்படவில்லை மற்றும் அவை சட்டப்பூர்வமாக பயன்பாட்டில் தொடர்ந்து இருக்கும்,” என்று தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், பொதுமக்கள் இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Has RBI really asked banks to stop disbursing ₹500 notes from ATMs by September 2025?
A message falsely claiming exactly this is spreading on #WhatsApp #PIBFactCheck
No such instruction has been issued by the @RBI.
₹500 notes will continue to be legal tender.
— PIB Fact Check (@PIBFactCheck) July 12, 2025
ரூ.500 நோட்டுகளின் தற்போதைய நிலை
இந்திய ரிசர்வ் வங்கியின் 2024-25 ஆண்டு அறிக்கையின்படி, ரூ.500 நோட்டுகள் இந்தியாவில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் நோட்டாக உள்ளது. மார்ச் 31, 2025 வரை, 500 ரூபாய் நோட்டுகள் மொத்த புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 40.9% ஆக உள்ளது. மேலும் மொத்த மதிப்பில் 86% ஆகவும் உள்ளன. மொத்த புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் மதிப்பு 6% உயர்ந்து, ரூ.36.88 லட்சம் கோடியாக உள்ளது. 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட இந்த ரூ.500 நோட்டுகள் புதிய வண்ணம் மற்றும் வடிவமைப்புடன் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தன. சமீபத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றது போல ரூ. 500 நோட்டுகளையும் திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | 260 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கையில் ஷாக்கிங் உண்மை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









