Govt Pensioners Latest News: மாதம் மாதம் அரசு ஓய்வூதியம் பென்ஷன் பணம் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடாக வங்கிகள் வட்டியை செலுத்த வேண்டும் என ஆர்பிஐ (RBI) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதற்காக வெளியிடப்பட்டு உள்ளது? இதன்மூலம் யாரெல்லாம் பயன்பெற முடியும்? என்ற விவரங்களை பார்ப்போம்.
மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓய்வூதியம் பணம் வரவு வைக்ககூடிய வங்கிகள் ஓய்வூதியம் செலுத்துவதிலோ அல்லது ஓய்வூதிய நிலுவை தொகை செலுத்துவதிலோ தாமதம் செய்தால், ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படும். அதுக்குறித்து ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா (Reserve Bank of India) கூறியதைப் பற்றி முக்கிய விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா (Reserve Bank of India) சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
சமீபத்தில் வங்கிகள் மூலம் ஓய்வூதியம் செலுத்தப்படுவது குறித்து ரிசர்வ் வங்கி முதன்மை சுட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏப்ரல் 1, 2025 அன்று இந்திய ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட ஏஜென்சி வங்கிகள் மூலம் அரசு ஓய்வூதியம் வழங்கப்படுதல் என்ற முதன்மை சுற்றறிக்கையை வெளியிட்டது.
ஓய்வூதியம் மற்றும் நிலுவை தொகைகளை வழங்குவதில் அதிகப்படியான தாமதம் ஏற்படுவதாக ஓய்வூதியதாரர்களிடமிருந்து பல புகார்கள் வந்ததை அடுத்து, தாமதமான ஓய்வூதியத்திற்கு வட்டியை செலுத்தும் அம்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி தனது முதன்மை சுற்றறிக்கையில் சேர்த்தது.
மேலும் வங்கிகள் ஓய்வூதியதார்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு நிலுவை தொகைக்கு ஆண்டுக்கு 8% வட்டி செலுத்தி தாமதத்தை ஈடு செய்ய வேண்டும் என்று முதன்மை சுற்றறிக்கையில் கூறியுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத நிலையான வட்டி விகிதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தாமதமாக வழங்கப்படும் ஓய்வூதியத்திற்கான வட்டி தானாகவே வரவைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 1, 2008 முதல் தாமதமாக செலுத்தப்பட்ட அனைத்து ஓய்வூதியத் தொகைகளுக்கும் வங்கிகள் திருத்தப்பட்ட ஓய்வூதியம் நிலவை தொகைகளை வழங்கும்போது, அதே நாளில் ஓய்வூதியதாரர்களிடமிருந்து எந்த கோரிக்கையும் இல்லாமல் இழப்பீடு தானாகவே ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் எனவும் ஆர்பிஐ சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கையில் ஓய்வூதியம் செலுத்தும் அதிகாரிகளிடமிருந்து ஓய்வூதிய உத்தரவுகளின் நகல்களை உடனடியாக பெறுவதற்கான வழிமுறையை வங்கிகள் உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து அறிவுறுத்தல்கள் வரும் வரை காத்திருக்காமல் ஓய்வூதிய கொடுப்பனவு முடிக்கப்பட வேண்டும்.
பணம் செலுத்துவதை தாமதப்படுத்துவதற்கு பதிலாக, அடுத்த மாத ஓய்வூதியத்திலேயே சலுகைகள் செலுத்தப்படுவதை உறுதி செய்யும். மேலும் ஓய்வூதிய கணக்கை கையாளும் வங்கிகள், கிளைகள் ஓய்வூதிர்களுக்கு வங்கியுடனான அவர்களின் பரிவர்தனைகளில் வழிகாட்டி உதவ வேண்டும்.
ஓய்வூதியம் வழங்கும் அனைத்து முகமை வங்கிகளும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பாக வயதான ஓய்வூதியர்களுக்கு அக்கரையுடனும் அனுதாபத்துடனும் கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்க அறிவுறுத்தப்படுகின்றன என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - தமிழக அரசு வெளியிட்டுள்ள 15 முக்கியமான அதிரடி அறிவிப்புகள்! மிஸ் பண்ணிடாதீங்க!
மேலும் படிக்க - நோஷனல் ஊதிய உயர்வு மூலம் இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: DoPT அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









