ஜம்முவில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விஅரத்தை இங்கு பார்ப்போம்.

பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி, ஜம்மு மாவட்டம் முழுவதுமாக சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்ட காணொகள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட மத உணர்வை தூண்டும் கண்டெண்ட்களை வெளியிடவும், பகிரவும் ஜம்மு நிர்வாகம் 60 நாட்கள் தடை விதித்துள்ளது.
காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட 60 நாட்கள் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இது குறித்து கலெக்டர் ராகேஷ் மின்ஹாஸ் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
“மதம், சாதி மற்றும் மொழிரீதியாக பகைமை உணரும் உருவாக்கும் வகையிலான வீடியோக்கள், வசனங்கள், மீம்கள் மற்றும் ரீல்ஸ்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “போலி செய்திகளை பரப்புவோர் மீது பாரதிய நாகரிக் சசுரஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க சட்டத்தில் இடமுண்டு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் குழுக்களின் அட்மின்கள், தங்களது குழுவில் இது போன்ற பதிவுகள் வராமல் தடுக்க வேண்டும் என்றும், இதை மீறினால், அவர்களும் சட்டரீதியான பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் டெலிகிராம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சமூகத்தில் மோதல்களை தூண்டும் வகையிலான போலிச்செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், அரசுடைய சஹ்யோக் தளம் வழியாக வருகிற பதிவு நீக்குதல் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்குமாறு, சமூக ஊடக அட்மின்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் அவ்வாறு செய்ய தவறினார்களேயானால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழவர்களுக்கு வழங்கப்படும் சில பாதுகாப்புகளை அவர்கள் இழக்க நேரிடலாம்.
விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு, ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இது போன்ற குற்றங்கள் ஏற்படுவதை கண்காணிக்க, 24 மணி நேர கண்காணிப்பு குழுவும்ன் நியமிக்கப்பட்டுள்ளதாம். அதே வேளையில், அந்தந்த துணை கோடாட்சியர்களின் மேற்பார்வையின் கீழ் துணை பிரிவு மட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!