)
Ration Card Latest News: ரேஷன் கார்டுகளை தவறான முறையில் பயன்படுத்தி வரும் மக்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் துறையால் ரேஷன் கார்டு குறித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தகுதியான குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, இதுவரை மொத்தம் நான்கு பிரிவுகளில் 2.58 லட்சம் (2,58,344) ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுக்குறித்து முழு தகவலையும் பார்ப்போம்.
நாடு தழுவிய அளவில் ரேஷன் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு, தகுதியற்ற மற்றும் போலி அட்டைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகைகளில், குடும்பத் தலைவர் இறப்பு, 100 வயதுக்கு மேற்பட்டவர் மற்றும் 18 வயதுக்குக் குறைவானவர்கள், 6 மாதங்களாக தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பது, விதிகளை மீறுதல் மற்றும் இரட்டைப் பலன் பெறும் பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது, ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்ட பயனாளிகள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் உள்ளனர். தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, இதுவரை 3,17,575 ரேஷன் கார்டுகள் NFSA-வில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் தகுதியான பயனாளிகள் மட்டும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் சேர்க்கப்பட்டு, ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.
- ரத்து செய்யப்பட்ட அட்டைகளில் பெரும்பாலானவை பயனாளிகள் இறந்தவர்களின் பெயரில் உள்ளன. மொத்தமுள்ள 2.54 லட்சம் (2,54,887) அட்டைகளில், 1.44 லட்சம் (1,44,567) அல்லது 57% அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கார்டுகள் தொடர்ந்து சரி பார்க்கப்பட்டு 5,489 அட்டைதாரர்கள் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், உணவு பொது விநியோகம் துறையால் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. 1.04 லட்சம் (1,04,831) அட்டைதாரர்கள் மீதான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. அதிகபட்சமாக தன்பாத்தில் இருந்து 12,561, தும்காவில் இருந்து 11,581, ராஞ்சியில் இருந்து 11,169 மற்றும் பூர்பி சிங்பூமில் இருந்து 9,038 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- 100 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 18 வயதுக்குக் குறைவான 1,67,504 அட்டைகளில், 8381 (5.0%) ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குடும்பத் தலைவியாக இருக்கும் பெண் ஒருவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று பொது விநியோக கட்டுப்பாட்டு ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- ஒரு குடும்ப அட்டைதாரர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் கடையில் எந்தப் பொருளும் வாங்காமல் இருந்தால், அவர்களுக்கு அந்த அத்தியாவசியப் பொருட்களின் தேவை இல்லை எனக் கருதி, அந்த கார்டு தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டு, பின்னர் சரிபார்ப்புக்குப் பின் ரத்து செய்யப்படும். அந்த வகையில் 8,02,685 அட்டைகளில் 97,867 அட்டைகள் (12.19%) ரத்து செய்யப்பட்டுள்ளன.
- இரட்டைப் பலன் (ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் பல கார்டுகள் வைத்திருப்பது) பெறும் 2,00,716 அட்டைகளில் 7,529 (3.75%) அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரட்டைப் பலன் என்பது தேசிய ரேஷன் கார்டு போர்ட்டபிலிட்டி திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஒரே ஆதார் அட்டையில் மாநிலத்திற்குள் இரண்டு மாவட்டங்களில் அல்லது ஜார்க்கண்ட் மற்றும் பிற மாநிலங்களில் (ராஜஸ்தான், உத்தரபிரதேசம்) இருந்து ரேஷன் பெறுகிறார்கள் என்பதாகும்.
மாநில அரசின் முக்கியத் திட்டமான "முக்கிய மந்திரி மைனியா சம்மன் யோஜனா" (Mukhyamantri Mainiya Samman Yojana) திட்டத்துடன் ரேஷன் கார்டுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அட்டையுடன் பெயர் இணைக்கப்பட்ட 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.2500 நிதிப் பலன் வழங்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், 2,58,344 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பெண் பயனாளிகளும் மைனியா யோஜனாவில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 3,17,575 புதிய பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் உருவாக்கப்பட்டால், அதில் சேர்க்கப்பட்டுள்ள பெண் பயனாளிகள் மைனியா சம்மன் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ