)
Healthcare Worker Jumped Flood Viral Video : மருத்துவ பணியாளர் ஒருவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல், ஒரு முக்கிய பணிக்காக அதை தாண்டி குதித்து சென்ற வீடியோவானது, இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அப்படி என்ன முக்கிய வேலையாக சென்றார்? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள, மண்டி எனும் மாவட்டத்தில் இருக்கிறது சௌகர் வேலி. இங்கு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில், கமலா தேவி என்கிற மருத்துவ பணியாளர் வேலை செய்து வருகிறார். மேக வெடிப்பு காரணமாக கடும் மழை பெய்து வருகிறது. கூடவே, இங்கு வெள்ளபெருக்கும் ஏற்பட்டுள்ளதால், தரைப்பாலங்கள் உடைந்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால், இந்த மருத்துவ பணியாளர் கமலா தேவி, ஹுராங்க் என்கிற கிராமத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தார். இவருக்கு, அந்த கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இருந்தது. ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த கிராமத்திற்கு எப்படி செல்வது என்று யோசித்தார்.
கமலா தேவி, பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல், ஒரு பெரும் பாறையில் ஏறி நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு, வெள்ளத்திற்கு அருகில் ஓடும் இன்னொரு பாறையின் மேல் பத்திரமாக குதித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண், காலில் போட்டுக்கொண்டிருந்த செருப்பை கழற்றி கைகளில் வைத்துக்கொண்டு, தோள்பட்டையில் ஒரு பையையும் மாட்டிக்கொண்டு இந்த வேலையை செய்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்தவர்களின் ரியாக்ஷன் கலவையாக இருக்கிறது.
HEROIC ACT IN HIMACHAL PRADESH
— Ajanta News (@AjantaNews) August 24, 2025
In Chauhar Valley, Mandi district, health worker Kamala Devi risked her life by crossing the overflowing Swad Khad to vaccinate a 2-month-old baby.
Her unwavering dedication at PHC Sudhar under Health Block Padhar is being hailed as a shining… pic.twitter.com/b1tubzY94j
நெட்டிசன்களின் கருத்து..
கமலா தேவியின் இந்த செயலை பார்த்த சிலர் அது குறித்து வியந்து கூறி வருகின்றனர். ஒரு சிலர், “ஒரு தடுப்பூசிக்காகவா இவ்ளோ ரிஸ்க் எடுக்கிறார் இந்த பெண்?” என்று கூற, இன்னும் சிலர் இந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். தனது தொழிலை, வேலையாக கருதாமல் ஒரு சேவையாக கருதுவதால்தான் அவரால் இப்படி உயிரை பணயம் வைத்து வேலை செய்ய முடிவதாக சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும், அரசாங்கம் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், விரைவாக வந்து பாலத்தை அமைக்க வேண்டும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கைகளாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ