Karnataka Family Pahalgam Terror Attack : ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிடப்பியிருக்கிறது. இதில் 26 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், தாக்குதலிலிருந்து தப்பிய ஒரு குடும்பத்தை பற்றிய செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஹல்காம் தாக்குதல்:
மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்தான் இந்த தாக்குதல் நடந்தது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இந்த இடத்தில், குதிரை சவாரி, ஜிப் லைன், பார்க், ஹோட்டல்கள் என அவர்களுக்கு தேவையான நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று சில பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
வெளிநாட்டினர், உள்ளூர் வாசிகள் என பலர் மீது இந்த பயங்கரவாத தாக்குதலானது நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி இருப்பதாக இந்தியா சந்தேகிக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி பலர் நாட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பான விசாரணையில், காஷ்மீரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து, இதிலிருந்து தப்பித்தவர்கள் சிலர் கூறும் விஷயங்கள் குலை நடுங்க வைப்பதாக இருக்கிறது.
உயிர் தப்பியே கர்நாடக குடும்பம்..
கர்நாடகத்தை சேர்ந்த பிரதீப் ஹெக்டே, அவரது மனைவி சுபா ஹெடே மற்றும் மகன் சித்தாந்த் ஆகியோர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அன்று சுற்றுலாவிற்காக ஸ்ரீநகர் சென்றிருக்கின்றனர். இவர்கள் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் இருந்திருக்கின்றனர். இந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியது எப்படி என இவர்கள் ஒரு வீடியோவில் பேசியிருக்கின்றனர்.
இவர்கள் செல்ல நினைத்த இடத்திற்கு (தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில்) செல்வதற்கு கார் வசதி இல்லாததால் மூன்று குதிரைகளில் சவாரி செய்து இருக்கின்றனர். இதனால் தாங்கள் செல்ல நினைத்த இடத்திற்கு செல்வதற்கு 15 நிமிடங்கள் ஆனதாக கூறியிருக்கின்றனர். தாக்குதல் நடந்த ஜிப்லைன் பகுதிக்கு அருகில் ஒரு காலியான இடம் இருந்திருக்கிறது. அங்கு சென்று சில போட்டோக்கள் எடுத்துவிட்டு கிளம்பலாம் என நினைத்திருக்கின்றனர். அங்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நேரம் செலவிட்டிருக்கின்றனர்.
தாமதத்தால் தப்பிய உயிர்கள்..
மதியம் 1:45 மணி அளவில் மீண்டும் தாங்கள் சுற்றுலா தளத்திற்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் தனது மகன் பசிக்கிறது என்று கூறியிருக்கிறார். இங்கிருந்து செல்லும் முன்பு சாப்பிட்டுக் கொள்ளலாம் என எவ்வளவு கூறியும் அவர் சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டும் என அடம் பிடித்ததாக கூறியிருக்கின்றனர். இதனால் சாப்பாடு விற்கும் பகுதிக்கு சென்று மேகி ஆர்டர் செய்துள்ளனர்.
உணவு வருவதற்குள் சுற்றுலா பயணியின் மனைவி சுபா, சுமார் 500 மீட்டர் இடைவெளியில் இருக்கும் கழிவறைக்கு சென்று இருக்கிறார். அது கட்டண கழிவறை என்பதை தெரிந்து கொண்டு மீண்டும் வந்து பணம் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். இதனால் இவர்கள் தாக்குதல் நடந்த இடத்திற்கு செல்ல தாமதமாகி இருக்கிறது.
மயிரிழையில் சென்ற துப்பாக்கி குண்டு..
டீ ஆர்டர் செய்தபோது துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக கூறியிருக்கிறார் சுற்றுலா பயணி பிரதீப் ஹெக்டே. அது துப்பாக்கி சூடு சத்தம் என்பதை அப்போது தான் அறியவில்லை எனக் கூறியிருக்கும் அவர், அதை பட்டாசு சத்தம் என நினைத்ததாக பேசி இருக்கிறார். சில வினாடிகள் கழித்து இரண்டு பேர் பெரிய துப்பாக்கியுடன் வந்து தொடர்ச்சியாக சுட்டதாக கூறி இருக்கிறார்.
பின்னர் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு சுதாரித்த இவர்கள் தரையோடு தரையாக படுத்ததாக கூறியிருக்கின்றனர். அப்போது, சுபா மேஜை மீது இருந்த அவர்களின் பையை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதில் அவர்களது பர்ஸ் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அந்த சமயத்தில் அவரது காதை தாண்டி ஏதோ செல்வதை உணர்ந்து இருக்கிறார். பின்னர் அது, ஒரு துப்பாக்கி குண்டு என்று தெரிந்திருக்கிறது.
யாரோ “கேட்டை நோக்கி ஓடுங்கள்” என்று சத்தம் போட, இவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர், 2-3 கிலோ மீட்டர் தூரம் ஓடியதாக கூறிய அவர்கள், கடவுள்தான் தங்களின் உயிரை அன்று காப்பாற்றியதாக பேசியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்! மோடிக்கு வைத்த வேண்டுகோள்..வைரல் வீடியாே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









