பிளாஸ்டிக் பேப்பரில் கம கம இட்லி..! காத்திருக்கும் பேராபத்து..! உஷார் மக்களே!

தென்னிந்தியாவை பொருத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு தான் இட்லி. உடம்பு சரியில்லை என்றால் கூட இட்லியை சாப்பிட தான் பலருக்கும் மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். இப்படி அனைவரையும் கவர்துள்ள இந்த இட்லியே இப்போது நஞ்சாக புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது கர்நாடக அரசு. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Feb 28, 2025, 02:13 PM IST
  • இட்லி சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது
  • கர்நாடக அரசு எச்சரிக்கை
பிளாஸ்டிக் பேப்பரில் கம கம இட்லி..! காத்திருக்கும் பேராபத்து..! உஷார் மக்களே!

தென்னிந்தியாவை பொருத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு தான் இட்லி. உடம்பு சரியில்லை என்றால் கூட இட்லியை சாப்பிட தான் பலருக்கும் மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். இப்படி அனைவரையும் கவர்துள்ள இந்த இட்லியே இப்போது நஞ்சாக புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது கர்நாடக அரசு. 

Add Zee News as a Preferred Source

சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள 250 ஹோட்டல்களில் அம்மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதில் தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பெரும்பாலான ஹோட்டல்களில் இட்லி துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர் மூலம் இட்லியை ஊற்றுகின்றனராம். இட்லி அழகான ஷேப்பில் வருவதற்காகவும், வேலை சுலபமாகிறது என்பதற்காகவும் இப்படி இட்லி துணிக்கு பதில் பிளாஸ்டிக்கால் ஆன குட்டி குட்டி தட்டுகள், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

மேலும் படிங்க: ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!

அதிக வெப்பத்தில் பிளாஸ்டிக்கில் இருந்து நச்சுடததன்மை வெளியாகும். பிளாஸ்டிக் பேப்பர் மூலம் இட்லி வேகவைக்கப்படும் போது அதில் இருந்து டையாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வேதிப்பொருள் வெளியாகி இட்லியில் கலக்கிறதாம். அதனால் அதனை வாங்கி சாப்பிடும் போது மக்களின் உடலுக்குள் அந்த ரசாயணம் கலக்கிறது. இடனால் புற்றுநோய் அபாயமும் அதிகரித்துள்ளது என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹோட்டல்களில் நடந்த சோதனையில், இட்லிக்குள் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டடாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தனைய பிளாஸ்டிக் உடலில் கலந்தால் புற்றுநோய் உண்டாக முக்கிய காரணமாக அமைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. பல ரீல்ஸ்களில் இந்த பிளாஸ்டிக் இட்லி பேப்பரை பலரும் பிரமோட் செய்து வருவதால், வீட்டிலும் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிங்க: ரேஷன் பொருட்கள் எடை சரியாக இருக்கிறதா? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News