பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை! மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடகாவின் மருத்துவ கட்டுப்பாட்டு துறை ஆய்வக சோதனையில் பயன்படுத்த தகுதியற்றவை என முடிவுகள் வந்த பாராசிட்டமால் மாத்திரை உட்பட 15 மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Written by - RK Spark | Last Updated : Jun 29, 2025, 03:48 PM IST
  • பாராசிட்டமால் மாத்திரைக்கு தடை.
  • மக்கள் பயன்படுத்த தடை.
  • மாநில அரசு அதிரடி உத்தரவு.
பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை! மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு துறை சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகள் மற்றும் சில அழகு சாதன பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் மக்கள் பயன்படுத்த பாதுகாப்பற்றவை என்று ஆய்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநில சுகாதார துறையின் கீழ் இந்த துறைகள் செயல்படுகிறது. கடந்த மே மாதம் இவற்றின் மீது நடத்தப்பட்ட சோதனையில், பொதுமக்கள் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என்ற ஆய்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 3 முதல் லெவல் 10 வரை... அகவிலைப்படி, சம்பளம் எவ்வளவு உயரும்?

கர்நாடக அரசு தடை செய்யப்பட்ட பொருட்களில் அபான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த பாராசிட்டமால் மாத்திரை, என் ரங்கா ராவ் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் குங்குமம், பிற மருந்து கரைசல்கள், சிரப்கள், மாத்திரைகள், கால்நடை தடுப்பூசி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அல்ட்ரா லேபரேட்டரீஸ் பிரைவேட் லிமிடெட், டாம் பிரான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த காப்ஸ்யூல்கள், புனிஸ்கா இன்ஜெக்டபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த சோடியம் குளோரைடு ஆகியவை அடங்கும்.

கர்நாடக அரசு வெளியிட்டுள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும்,  மருத்துவமனைகள், நர்சிங் ஹோமங்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மருத்துவர்களிடம் உள்ள இந்த தடை செய்யப்பட்ட மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவோ அல்லது இருப்பு வைக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உத்தரவை மீறி இந்த பொருட்களை வைத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது உள்ள ஸ்டாக்குகள் பற்றிய விவரங்களை அரசுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை எப்போது வருகிறது? பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News