ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தற்போது பல ஹோட்டல்கள் தங்களின் வசதிக்காக இட்லியை பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து சமைக்கின்றனர். இதனால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று கர்நாடக தடை விதித்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 28, 2025, 01:02 PM IST
  • இட்லியை பிளாட்டிக் தாள்களில் சமைக்கும் ஹோட்டல்கள்.
  • அதிரடி ரெய்டு நடத்திய சுகாதாரத்துறை.
  • ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்ம் அனுப்பப்பட்டுள்ளது.
ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் பிரியமான மற்றும் சத்தான காலை உணவாக இட்லி உள்ளது. ஆவியில் வேகவைக்கப்படுவதால் எளிதில் ஜீரணம் ஆகி எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாத உணவாக இட்லி உள்ளது. இதனால் இட்லி பல்வேறு கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளது. அரிசி மற்றும் உளுந்து கொண்டு அரைக்கப்படும் இட்லியில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. ஒரு நாளை தொடங்குவதற்கு தேவையான ஆற்றலை இவை வழங்குகிறது. இருப்பினும், தற்போது இவற்றை சமைக்கும் முறைகளால் உடல் நல பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க - அம்பேத்கர் & பகத்சிங் புகைப்படம்! ஆம் ஆத்மி vs பாஜக இடையே கடும் வாரத்தை போர்

பிளாட்டிக் தட்டில் இட்லி

தங்களின் வசதிக்காக பல்வேறு ஹோட்டல்கள் தற்போது இட்லியை பிளாஸ்டிக் ஷீட்களில் வைத்து சமைக்கின்றனர். இதனால் இட்லியில் நச்சு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், புற்றுநோய் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது என்றும் பிளாஸ்டிக் ஷீட்களை பயன்படுத்த கர்நாடக தடை தடை விதித்து துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளது. இட்லியை பிளாட்டிக் ஷீட்களில் சமைப்பதால் அதில் இருந்து வெளியேறும் நச்சு உணவில் கலக்கும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்துள்ளார். இந்த நடைமுறையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர் குரல் கொடுத்துள்ளார்.

"பிளாஸ்டிக்கில் இருந்து வரும் நச்சுக்கள் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன, இது புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு ஹோட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. மொத்தம் 251 ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட்டதில் 51 ஹோட்டல்கள் இட்லிகளை வேகவைக்க பிளாஸ்டிக் ஷீட்களை பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அபாயகரமான நடைமுறையை உடனடியாக நிறுத்துமாறு ஹோட்டல்களுக்கு வலியுறுத்தப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.  

மேலும் இட்லியை சமைக்க பாரம்பரிய சமையல் முறையான பருத்தி துணிகளை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் குண்டுராவ் கேட்டுக்கொண்டுள்ளார். பருத்தி துணியைப் பயன்படுத்துவது பாதுகாப்பான வழி என்று வலியுறுத்தினார். கர்நாடக மாநில அரசு வெறும் எச்சரிக்கைகளை மட்டும் வெளியிடாமல், தடையை தீவிரமாக அமல்படுத்தி, ஆரோக்கியமான மாற்று வழிகளை கடைப்பிடிக்க ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை ஊக்குவித்து வருகிறது. துருப்பிடிக்காத எஃகு தாள்கள் மற்றும் வாழை இலைகள் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த முயற்சிகள் மூலம், கர்நாடக அரசு பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இந்திய உணவுகளின் வளமான சத்துக்களையும், சமையல் மரபுகளையும் பாதுகாத்துள்ளது.

மேலும் படிக்க | குழந்தைகளை தூக்கிலிட்ட பள்ளி நிர்வாகம்! வைரலாகும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News