இந்தியா பக்கம் நிற்கும் நட்பு நாடுகள்.. போர் வெடித்தால் வெற்றி யாருக்கு?

Pahalgam Attack News In Tamil: தற்போது இந்திய அரசு மேற்கொண்டு உள்ள முயற்சிகளை பார்க்கும் போது, அடுத்த பெரிய தாக்குதலுக்கான அல்லது போருக்கான ஆயத்தமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 24, 2025, 08:27 PM IST
இந்தியா பக்கம் நிற்கும் நட்பு நாடுகள்.. போர் வெடித்தால் வெற்றி யாருக்கு?

India - Pakistan Latest News: இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது அதேநேரம் வெளிநாட்டு தூதுவர்களையும் அழைத்து இந்தியா பேசி வருகிறது. தற்போது இந்திய அரசு மேற்கொண்டு உள்ள முயற்சிகளை பார்க்கும் போது, அடுத்த பெரிய தாக்குதலுக்கான அல்லது போருக்கான ஆயத்தமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடைபெற்று ஒருவேளை நாம் எதிர்தாக்குதல் மேற்கொண்டால் மற்ற நாடுகளின் ஆதரவை தேவை என்பதிலும் இந்திய அரசு கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே இந்திய அரசின் அடுத்தக்கட்ட முயற்சி என்ன? இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் எவை? போர் ஏற்பட்டால் எந்த நாடு அதிகமாக பாதிக்கப்படும் என்பதை பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுமையான போர் ஏற்படுமா? எனக் கேள்விகள் எழுப்பிக்கொண்டு இருக்கும் நிலையில், இந்திய ராணுவ தளபதி நாளைக்கு ஸ்ரீநகர் விரைகிறார். அங்க ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். தீவிரவாதிகளை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டுடன் அமைந்திருக்கக்கூடிய எல்லை "லைன் ஆஃப் கண்ட்ரோல்" மற்றும் சீனவோட அமைந்திருக்கும் "லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல்" பற்றி பேசவுள்ளார். எல்லையில நமது ராணுவத்தின் தயார் நிலை எப்படி இருக்கிறது என்பதை கேட்டறிவார் என்று சொல்லப்படுகிறது.

அப்படியே பாகிஸ்தான் பக்கம் பார்த்தால், சர்பேஸ் டு சர்பேஸ் மிசைல்ஸ் ஏவுகனை சோதனையை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களும் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். 

ஒருவேளை போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்படும் என போர் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏனென்றால் பாகிஸ்தான் ஏற்கனவே ஒரு பின்தங்கிய நாடாக இருக்கிறது. மேலும் பொருளாதாரத்திலும் சிறப்பாக இல்லை. அதாவது பொருளாதாரத்தில் ரொம்ப பின்தங்கிய நாடாக இருக்கிறது. மேலும் அங்கு பெரிய தொழில் வளர்ச்சியோ அல்லது சர்வீஸ் செக்டார் வளர்ச்சி என பாகிஸ்தானில் எதுவும் பெயரிட்டு சொல்ல முடியாது. இதற்கிடையில் உள்நாட்டில் குழப்பங்கள் நிறைய இருக்கிறது. ராணுவத்திற்கும், அரசுக்குமே அண்டர்ஸ்டாண்டிங் கிடையாது. ராணுவமே பலமுறை ஆட்சியை கலைச்சிட்டு, ராணுவ ஆட்சி கொண்டு வந்திருக்காங்க. இப்படி எல்லாம் ஒரு குழப்பத்தில் இருக்கக்கூடிய ஒரு நாடுதான் பாகிஸ்தான். எனவே தான் போர் என்று வந்தால் பாகிஸ்தானால் தாக்கு பிடிக்க முடியாது என்று சர்வதேச போர் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். 

அத்நேரம் பாகிஸ்தானுக்கு யாரெல்லாம் உதவியாக வருவார்கள் என்று பார்த்தால், குறிப்பாக சீனாவை தவிர மற்ற நாடுகள் எல்லாம் இந்தியாவுக்கு நல்ல நட்பு நாடுகளாக இருக்கிறார்கள். அமெரிக்காவை எடுத்துக்கிட்டாலும் சரி, ரஷ்யாவை எடுத்துட்டாலும் சரி, இந்தியாவுடைய மிகச்சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இருக்கிறார்கள். 

சீனாவுக்கும் நமக்கும் எப்பவுமே ஒரு உரசல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியா - சீனா எல்லை பிரச்சனை காரணமாக இருநாடுகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது உண்டு.

அது மட்டுமில்லாமல் மறுபக்கம் வர்த்தக போர் சூடுபிடித்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாகிஸ்தானுக்கு யார் ஆதரவாக வருவார்கள் என்ற கேள்வி இருக்கிறது. 

இந்த விவகாரத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட இடத்தில் இந்தியா இருக்கிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் பின்புலத்தை தொடர்ந்து சென்றால், பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.

எனவே நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அப்பாவி மக்கள் 26 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஈவு இரக்கம் என்றி காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதிகளால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. எனவே இந்தியா கண்டிப்பாக ரியாக்ட் செய்யும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக இந்தியா தற்பொழுது பதிலடி நடவடிக்கை கொடுத்து வருகிறது.

எனவே நிச்சயமாக உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவிற்கு 100% இருப்பதாகவே சர்வதேச வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு ஏற்ற மாதிரி நம் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நாட்டின் தூதரக அதிகாரிகளை அழைத்து பேசி வருகிறது.  

அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், வெளி விவகாரத்ததுறை அமைச்சரும், இந்திய குடியரசு தலைவரை சந்தித்து பேசினார்கள். அடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து அரசுக்கு துணை நிற்போம். அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அனைத்து கட்சிகளுடைய ஆதரவு அரசுக்கு இருக்கு என்று அறிவிப்பார்கள்.

எனவே இனி இந்தியா எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க போகிறார்கள். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பார்க்க வேண்டிய இருக்கிறது.

மேலும் படிக்க - “தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்” பல்ஹாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..

மேலும் படிக்க - இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்

மேலும் படிக்க - பகல்காம் தாக்குதல்: 'இந்தியா போடும் நாடகம்' வீடியோ போட்ட லக்ஷர்-இ-தொய்பா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News