மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு பள்ளியில் வேலை.. பெண்களே மிஸ் பண்ணாதீங்க!

Central Governement Jobs: மத்திய அரசு பள்ளியில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.

Written by - Umabarkavi K | Last Updated : Nov 15, 2025, 07:40 PM IST
  • கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை
  • லட்சக்கணக்கில் சம்பளம்
  • எப்படி விண்ணப்பிக்கலாம்?
மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. மத்திய அரசு பள்ளியில் வேலை.. பெண்களே மிஸ் பண்ணாதீங்க!

Kendriya Vidyalaya School Recruitment 2025: கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசு பள்ளியாகும்.  இந்த பள்ளி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.  நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான் பின்பற்றப்பட்டு வருகிறது.  இந்த பளளியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.  ‘

Add Zee News as a Preferred Source

KV School Recruitment: பணி விவரம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் பணியிடங்களை தவிர்த்து, மற்ற பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 14,967 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

அதன்படி, உதவி ஆணையர் பணிக்கு 8 இடங்களும், உதவி ஆணையர்  குரூப் ஏ பணிக்கு 9 பணியிடங்களும், முதல்வர் பணிக்கு 134 பணியிடங்களும், துணை முதல்வர் பணிக்கு 58 பணியிடங்களும், முதுகலை ஆசிரியர்கள் (PGT) 1,415 பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு (TGT) பணிக்கு 2,764 பணியிடங்களும், முதல்நிலை ஆசிரியர்கள் பணிக்கு 3,365 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. 

மேலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்தவரை, நூலகர் பணிக்கு 147 இடங்களும், நிர்வாகி அதிகாரி பணிக்கு 12 இடங்களும், நிதி  அதிகாரி பணிக்கு 5 இடங்களும், உதவிப் பொறியாளர் பணிக்கு 2 இடங்களும், உதவி பிரிவு அதிகாரி பணிக்கு 74 இடங்களும், இளநிலை மொழி பெயர்ப்பாளர் பணிக்கு 8 இடங்களும், மூத்த செயலக உதவியாளர் பணிக்கு 280 பணியிடங்களும், இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 714 பணியிடங்களும், சுருக்கெழுத்தர் பணிக்கு 57 இடங்களும்  நிரப்பப்படுகிறது.

KV School Recruitment: கல்வித்தகுதி

ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை, அந்தந்த பணியிடத்திற்கு ஏற்ப கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்தவரை, பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும்,  உதவியாளர் பணிக்கும், நூலகர் பணி போன்றவற்றுக்கு 10, 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KV School Recruitment:  வயது விவரம்

மேற்கண்ட பணியடங்களுக்கு பணிகளுக்கு ஏற்பட வயது வரம்பு மாறுபடும்.  இருப்பினும், அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.  எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக் 5 ஆண்டுகளும், ஒபிசி விண்ணப்பதாரர்கள்  3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பொது பிரிவினருக்கு 10 ஆண்டுகளும்,  மாற்றுத்திறனாளிகள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும்,  மாற்றுத்திறனாளிகள் ஒபிசி பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது. 

KV School Recruitment: மாத சம்பளம்

மாத சம்பளத்தை பொறுத்தவரை பணிக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி, உதவி ஆணையர் பணிக்கு ரூ.78,800 முதல் ரூ.2,09,200  வழங்கப்படுகிறது. முதுகலை ஆசிரியர்கள் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ.1.51 லட்சம் வழங்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வழங்கப்படும். நிர்வாக அதிகாரி நிலை ரூ.56,100 முதல் ரூ.1,77,500, இளநிலை மொழி பெயர்ப்பாளர் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முழுமையாக அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

KV School Recruitment: எப்படி விண்ணப்பிக்கலாம்?

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் KVSangathan.nic.In என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  டிசம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் அதிரடி நிறுத்தம்!

மேலும் படிக்க: +2 முடித்தால் போதும்.. ரயில்வேயில் சூப்பரான வேலை.. மாத சம்பளம் இவ்வளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News