16 Year Old Boy Harassed By 14 Men : கேரளாவின் காசர்காட் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

16 Year Old Boy Harassed By 14 Men : கேரளாவில் இருக்கும் காசார்காட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு, 16 வயது சிறுவன் ஒருவர், பலரால் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டுள்ளான். இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் குறித்து இங்கு பார்க்கலாம்.
2 வருடங்களாக..
16 வயது சிறுவன், 2 வருடங்களாக குன்னூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் 14 ஆண்களால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அதிர்ச்சிகர சம்பவம், அந்த சிறுவனின் தாயார் மூலமாக வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுவனின் தாய், தனது மகனை வேறு ஒரு நபருடன் தன் வீட்டில் வைத்து பார்த்திருக்கிறார். இவரை பார்த்தவுடன் அந்த நபர் வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். பின்னர், தன் மகனிடம் விசாரித்து விட்டு, அவர் கூறிய விஷயங்களை கேட்ட பின்பு குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார். இப்படி, போலீஸாருக்கு இது குறித்து தெரிய வந்துள்ளது.
14 பேர்..
போலீஸ் அதிகாரிகள், அந்த சிறுவனை அழைத்து விசாரித்து இருக்கின்றனர். இதை வைத்து, 14 பேர் மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது, கடந்த 2 நாட்களில் நடந்துள்ளது. இதற்கென்று ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணியும் நடந்து வருகிறது. இதில், காஸர்காட், குன்னூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 14 பேரில், 25 வயதில் இருந்து 51 வயது வரை இருக்கும் ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களாம். அவர்களுள், ரெயில்வேயில் பணிபுரியும் 2 அரசு அதிகாரிகளும் அடங்குவர் என்பதை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுவன், தன் பாலின ஈர்ப்பாளர்களுக்காக இருக்கும் டேட்டிங் செயலி மூலம், ஒருவரால் ட்ராப் செய்யப்பட்டு இப்படி வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ