Onam Lottery Ticket Winners: லாட்டரி டிக்கெட் என்றாலே தமிழ்நாட்டில் இப்போதைக்கு பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது கேரளம் தான். கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற அனைவருக்குமே தெரிந்திருக்கும் அங்கு லாட்டரி மீதான ஆர்வம் எந்தளவிற்கு இருக்கிறது என்று...
ரூ.25 கோடியை வென்றவர் யார்?
அப்படியிருக்க, கேரளா திருவோணம் பம்பர் BR-105 லாட்டரி முடிவுகள் நேற்று வெளியானது. இந்த பம்பர் லாட்டரியில் முதல் பரிசு தொகை ரூ.25 கோடியாகும். இந்நிலையில், நேற்று முடிவுகள் வெளியான நிலையில் இதுவரை யாரும் முதல் பரிசை வந்து கேட்கவில்லை. நாளைக்குள் வங்கியில் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வேண்டியுள்ள நிலையில், இதுவரை லாட்டரியை வாங்கியவர் அதன் ஏஜென்ஸியை இன்னும் தொடர்புகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இன்னும் சில தகவல்களும் வெளியாகி உள்ளன. அதாவது ரூ.25 கோடியை வென்றவர் பெண் என்றும் அதனால் அவரது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வரி போக எவ்வளவு கிடைக்கும்?
வெற்றியாளர் எர்ணாகுளத்தில் உள்ள நெட்டூரில் உள்ள லாட்டரி ஏஜென்ஸியில் இருந்துதான் அந்த பரிசு பெற்ற லாட்டரி விற்பனையாகி உள்ளது. TH 577825 என்பதுதான் பரிசு பெற்ற லாட்டரியின் நம்பர். வரி பிடித்தம் மற்றும் ஏஜென்ஸி கமிஷன் ஆகியவை கழிந்த பின் வெற்றியாளர்களுக்கு ரூ.15.75 கோடி கையில் கொடுக்கப்படும். இது ஒருபுறம் இருக்க, கேரளா திருவோணம் பம்பர் லாட்டரியில் ரூ.50 லட்சம் என்ற மூன்றாவது பரிசை 5 பெண்கள் இணைந்து வென்றுள்ளனர்.
லாட்டரியை வென்ற 5 பெண்கள் யார்?
ஆம், குடும்பஸ்ரீ குழுவைச் சேர்ந்த 5 பெண்கள் சேர்ந்துதான் TH 668650 என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கின்றன. பையனித்தோட்டம் சூர்யா குடும்பஸ்ரீ உறுப்பினர்களான கீரியாணிகள் சௌமியா சுஜீவ், கொட்டுக்குன்றேல் ரம்யா அனூப், கொட்டுக்குண்ணேல் உஷா மோகனன், ஒலிக்கல் சாலி சாபு, மற்றும் கும்பலாந்தனில் உஷா சாபு ஆகிய 5 பேர்தான் ரூ.50 லட்சம் பரிசை வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தலா ரூ.100 கொடுத்து இந்த லாட்டரி டிக்கெட்டை பூஞ்சூரில் உள்ள மனோஜ் என்பவரிடம் இருந்து பெற்றுள்ளனர்.
லாட்டரியில் நனைவாகும் கனவு வீடு
லாட்டரி பரிசை வென்றது தெரிந்ததும், பூஞ்சூரில் உள்ள கேரளா கிராம வங்கியில் அந்த லாட்டரி டிக்கெட்டை அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் லாட்டரியின் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையை வைத்து தங்களுக்கான சொந்த வீட்டை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
இந்த 5 பெண்களில் சௌம்யா, ரம்யா, உஷா, சாலி ஆகிய நால்வரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் ஆவர். இதில் சௌமியா மற்றும் ரம்யா ஆகியோரின் வீடு தற்போது கட்டமானப் பணியில் உள்ளன. உஷா மற்றும் சாலிக்கு இன்னும் பொருத்தமான மனைகள் ஒதுக்கப்படவில்லை. உஷா சாபுவுக்கு அவரது நிலத்தில் சிக்கல் இருப்பதால் வீடு கட்டுவதில் சவால்கள் உள்ளன. இப்போது லாட்டரியை வென்றதன் மூலம் அவர்கள் தங்களின் நீண்டநாள் கனவை நனைவாக்க உள்ளனர்.
மேலும் படிக்க | 13 குழந்தைகளை காவு வாங்கிய இருமல் மருந்து... காரணமான டாக்டர் கைது - முழு பின்னணி
மேலும் படிக்க |அரசு ஊழியர்களே ஸ்வீட் எடுங்க... தீபாவளி பரிசாக DA உயர்வு - மாநில அரசு அறிவிப்ப
மேலும் படிக்க | நகை கடன் விதிகளில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









