)
ஆன்லைன் கேமிங் மசோதா: இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக ஆன்லைன் கேமிங் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங் மசோதா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி ஆன்லைன் சூதாட்டம் தண்டனைக்குரிய குற்றமாக மாறியுள்ளது. அதே நேரம் ஆன்லைன் கேமிங் மசோதா நாளை ஆகஸ்ட் 20, 2025 அன்று மக்களவையில் அறிமுக செய்யப்படும்.
கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் கேமிங் மூலம் நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் பலர் ஆன்லைன் கேமிங் மூலம் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவமும் அரங்கேறின. பலர் ஆன்லைன் கேமிங்-கை தடை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.
இதனையடுத்து பந்தயம் ஊக்குவிப்பதை தடுக்கவும், அதன் விளம்பரங்களை தடை செய்யவும் ஒரு சட்டத்தை இயற்ற மத்திய அரசு முன்மொழிந்தது. அதன் அடிப்படையில் மசோதாவின் வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மீது புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்துள்ளன.
- ஆன்லைன் கேமிங் மசோதாவின் முக்கிய நோக்கம், பணத்தை வைத்து விளையாடும் சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுகளை தடை செய்வது, பயனர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் வரி ஏய்ப்பைத் தடுப்பது ஆகும்.
- இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் கேமிங் தளங்கள் சுய ஒழுங்குமுறை அமைப்பின் (SRO) கீழ் கொண்டு வரப்படும். சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடர்பான விளையாட்டுகள் தடை செய்யப்படும்.
- ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும், நிதி இழப்பு ஏற்படாமல் இருக்கவும் ஒரு கடுமையான சட்ட கட்டமைப்பை உருவாக்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். 18 வயதுக்குட்பட்டவர்களின், கேஒய்சி (KYC) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். ஆன்லைன் கேமிங் துறையை 28% அல்லது முன்மொழியப்பட்ட 40% ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படும் மற்றும் வருவாய் அதிகரிக்கும்.
நாட்டில் இதுவரை ஆன்லைன் கேமிங் தொடர்பாக எந்த சட்டமும் இல்லை. மாநில அளவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஆன்லைன் கேமிங்கிற்கு எதிராக கடுமையான விதிகளை இயற்றியுள்ளன. ஆனால் நாடு முழுவதும் பொருந்தும் ஒரு தேசிய சட்டம் இயற்றப்படவில்லை.
- பண பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேம்களை தடை செய்வதே முதன்மை நோக்கமாகும்.
- பணம் வைத்து சூதாட்ட விளையாட்டை அறிமுகப்படுத்தும் தளங்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும்.
- சட்டப்பூர்வமான மின் விளையாட்டுகள் மற்றும் பந்தயம் கட்டாத பிற ஆன்லைன் சமூக விளையாட்டுகளை ஊக்குவிக்க்கப்படும்.
- பணம் செலுத்தி பந்தயம் வைத்து விளையாடும் சூதாட்ட தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகளை சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் விளம்பரப்படுத்துவது தடை விதிக்கப்படும்.
ட்ரீம் 11 (Dream11) கிரிக்கெட் செயலிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாதல் அதிகரித்து வருவதாலும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிதி இழப்பு காரணமாகவும் தற்கொலை சம்பவங்கள் பல முன்னுக்கு வந்துள்ளன. எனவே புதிய மசோதாவின் முக்கிய விதிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் பொதுவில் வெளியிடப்படும். அதன்பிறகு ட்ரீம் 11 தடை குறித்து தெரியவரும்.
இளைஞர்கள் ஆன்லைன் கேமிங் செயலிகளைப் பயன்படுத்துவதற்குப் பழக்கமாகிவிட்டனர். குழந்தைகள் ஆன்லைன் கேம்களை விளையாடுவதில் நேரத்தைச் செலவிடத் தொடங்கியுள்ளனர். இது அவர்களின் தூக்கம், படிப்பு மற்றும் உறவுகளைப் பாதித்துள்ளது. இதுபோன்ற புகார்கள் பெரும்பாலும் பெற்றோரால் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் கேம்களை விளையாடுவதற்கு அதிக பணம் செலவழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது, இதனால் மக்கள் நிதி இழப்பை சந்தித்து தற்கொலை போன்ற நடவடிக்கைகளை நோக்கி செல்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ