1 பெண்ணை வைத்து பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா! யார் இவர்? முழு விவரம்..

Woman Who Helped India To Defeat Pakistan In 1971 : 1971ஆம் ஆண்டு, ஒரே ஒரு பெண்ணை வைத்து இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 8, 2025, 06:45 PM IST
  • 1971 போர்..இந்தியாவின் வெற்றிக்கு உதவிய பெண்!
  • ஒரு பெண்ணை வைத்து பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா..
  • அவர் யார் தெரியுமா?
1 பெண்ணை வைத்து பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா! யார் இவர்? முழு விவரம்..

Woman Who Helped India To Defeat Pakistan In 1971 : இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானும் பதில் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால், கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக இந்தியா கூறி வருகிறது. இதற்கு முன்னர் எத்தனையோ போர் தாக்குதல்கள் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்திருக்கிறது. அப்படி குறிப்பிடப்படும் ஒரு போர்தான், 1971ல் நடந்த போர். அந்த சமயத்தில், இந்தியா வெற்றி பெறுவதற்கு ஒரு இந்திய பெண் உதவியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

இளம் பெண்ணின் கதை..

2008ல் காலிங் ஷெஹ்மத் எனும் பெயரில் ஒரு புத்தகம் வெளியானது. உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட இந்த புத்தகத்தில், தந்தையின் ஆசையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு உளவாளியாக சென்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றியதாகும். 

1969ஆம் ஆண்டு, ஒரு 20 வயது இளம்பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். திடீரென ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் அவரது தந்தையிடமிருந்து (ஹிதாயாத் கான்-உண்மை பெயரல்ல) ஒரு அழைப்பு வந்தது. “என் கடைசி ஆசையை நிறைவேற்று..” என்று தனது மகளிடம் கூறியிருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் படிப்புடன் சேர்ந்து பரதம், வயலின் ஆகியவற்றை கற்று வந்த அந்த பெண், தந்தைக்காக படிப்பு அனைத்தையும் விட்டுவிட்டு, பாகிஸ்தானுக்கு உளவாளியாக சென்று, இந்தியாவிற்கு உதவியிருக்கிறார். அந்த பெண்ணிற்கு மேற்கூறிய புத்தகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெயர், ஷெஹ்மத்.

உளவாளியாக சென்ற பெண்..

ஷெஹ்மத்தின் தந்தை, இந்திய உளவுத்துறையின் RAW Agent-ஆக இருந்திருகிறார். இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965ல் போர் நடந்த சமயத்தில் இந்தியாவிற்கு ரகசியமாக தகவல் கொடுக்கும் அதிகாரியாக இருந்திருக்கிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவர் ஒரு கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, தனது கடைசி ஆசையை நிறைவேற்றுமாறு, படித்துக்கொண்டிருந்த மகளை வரவைத்து பேசியிருக்கிறார்.

அவர், தன் மகளிடம் “நீ பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்ல வேண்டும். அதற்கு நீ பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதன்படி, ஷெஹ்மத், இக்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்கு முன்பு இந்திய ராணுவ அதிகாரி ஒருவரால், ஷெஹ்மத் என்ன செய்ய வேண்டும், எப்படி தகவல்களை பகிர வேண்டும் என கற்பிக்கப்படுகிறது. அந்த பெண்ணும், தனது உயிரை பணயம் வைத்து பாகிஸ்தானுக்கு உளவுத்துறை அதிகாரியாக செல்கிறார்.

இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட பெண்!

ஷெஹ்மத்திற்கு கொடுக்கப்பட்ட வேலை, பாகிஸ்தான் ராணுவம் என்னென்ன திட்டங்களை வைத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, SOS எனப்படும் அழைப்பான் மூலம், அவசர உதவி என்றால் மோர்ஸ் கோட் (ரகசிய மொழி) வழியாக விஷயத்தை சொல்ல வேண்டும். 

திருமணம் செய்துகொண்டு சென்ற குடும்பத்தில், பேசி, உறவாடி நம்பிக்கையை பெறுகிறார் ஷெஹ்மத். கொஞ்சம் கொஞ்சமாக தனது யுக்தி மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் டாப் ரகசியங்களை தெரிந்து கொள்கிறார். 1971 சமயத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சமயத்தில், இந்தியாவிடம் போர் தாங்கி கப்பலான் INS விக்ராந்த் இருந்தது. இது, போரில் பயன்படுத்தப்படும் என்பதை பாகிஸ்தான் அறிந்திருந்தது. இதையடுத்து,  பாக்., இதன்மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஷெஹ்மத் தெரிந்து கொள்கிறார்.

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை மூழ்கடிக்க பாகிஸ்தானின் திட்டத்தை இந்தியாவிடம் தெரிவித்தது அவரது முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்த கப்பலை மூழ்கடிக்க பாகிஸ்தான் வைத்திருக்கும் நீர்மூழ்கி கப்பல் குறித்தும், அது எங்கிருந்து தாக்குதல் நடத்த இருக்கிறது என்பது குறித்த தகவல்களையும் இந்தியாவிடம் தெரிவிக்கிறார். இது, பாகிஸ்தானை இந்தியா தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

பிறகு என்ன நடந்தது?

ஷெஹ்மத், இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரைப்பற்றிய உண்மை தெரிந்த அவரது கணவர், மைத்துனர் கொல்லப்பட்டனர். ரஹ்மத்திற்கு புது பெயர் வழங்கப்பட்டது. இவர், கர்ப்பமாக இருந்த சமயத்தில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அது மட்டுமல்ல, “தான் ஒரு கொலையாளி ஆகிவிட்டோமே, ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை கெடுத்து விட்டோமே” என்கிற குற்ற உணர்வு இவருக்கு அதிகமாக இருந்திருக்கிறது. இதனால், தனது குழந்தையும் வளர்க்க முடியாமல் தவித்திருக்கிறார். அதன் பிறகு, அவது முன்னாள் காதலர் குழந்தையை வளர்த்திருக்கிறார். சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஷெஹ்மத், 2018ஆம் ஆண்டில் உயிரிழந்திருக்கிறார்.

இதனை மையமாக வைத்து RAAZI எனும் படமும் வெளிவந்துள்ளது. இதில் ஆலியா பட் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் படிக்க | 1971 பாகிஸ்தான் போர்... தாஜ்மஹாலை மொத்தமாக மூடிமறைத்த இந்தியா... அது எப்படி...?

மேலும் படிக்க | அதற்குள் படமாகும் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’? பெயர் உரிமையை வாங்க பயங்கர போட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News