)
Kolkata Girl Law Student Sexual Harrasment Case: கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில், மருத்துவ மாணவி ஒரு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து இந்த வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு தற்போது ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கடுமையான தண்டனைகளை அமல்படுத்துவதற்காக அபராஜிதா பெண் மற்றும் குழந்தை மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
Kolkata News: சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
இந்த சூழலில், கொல்கத்தாவில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்திருப்பது மீண்டும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் காவலர்களுக்கான அறையில் 24 வயது கல்லூரி மாணவியின் மீது ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய போது இரண்டு பேர் அதை பார்த்துக்கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அந்த பெண் கொடுத்த புகாரில், "J, M, P என எழுத்துகளில் பெயரை கொண்ட 3 பேர், மாணவ அமைப்பு கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்த தன்னை இரவு 7.30 மணியளவில் சுற்றிவளைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதில் M மற்றும் P இருவரும் தன்னை ஒரு அறையில் J நபருடன் அடைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Kolkata News: கெஞ்சிக் கதறிய மாணவி
மேலும், அந்த J நபர் தன்னை அந்த அறையில் இருந்த கழிவறைக்கு இழுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், போலீசாரிம் அளித்த புகாரில், "நான் திருப்பி சண்டையிட்டேன். நான் கதறி அழுதேன். என்னை விட்டுவிடு என அவனிடம் கேட்டேன். அவன் காலில் கூட விழுந்தேன். ஆனால் அவன் என்னை விடவே இல்லை. மேலும், தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க அவன் வலுகட்டாயமாக முயன்றதாகவும், அவனை தான் தள்ளிவிட்டுக்கொண்டே இருந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும், அவனிடம் 'என்னால் இதை செய்யவே முடியாது, எனக்கு காதலன் இருக்கிறான், நான் அவனை காதலிக்கிறேன்' என கூறி தன்னை விட்டுவிடும்படி கெஞ்சி உள்ளார்.
Kolkata News: ஆளுங்கட்சி பிரமுகருக்கு தொடர்பு?
கல்லூரி மாணவியின் புகாரில், தன்னிய தாக்கியவர்களில் ஒருவர் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்றும் அக்கல்லூரியின் திரிணாமுல் காங்கிரஸ் சத்ர பரிஷத் பிரிவின் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தலைவராக இருக்கிறார் என்றும் அடையாளம் காட்டி உள்ளார். அவருக்கு ஏகபோக அதிகாரம் இருக்கிறது என்றும் அனைவரும் அவர் சொல்வதையே கேட்பார்கள் என்றும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.
Kolkata News: அரசியல் களத்திலும் பரபரப்பு
தற்போது சட்டக்கல்லூரி மாணவி அளித்துள்ள இந்த புகார் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு அரசியல் விவகாரமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை குறிவைத்து குற்றஞ்சாட்டி வருகிறது. போலீசார் மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் முக்கிய நபர் என மனோஜித் மிஸ்ரா என்பவரை போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் மிகுந்த செல்வாக்குமிக்கவர் என பாஜக தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்த விவகாரம் அரசியல் தளத்தில் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. இதற்கு முன் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி வழக்கிலும் குற்றவாளியை சட்டத்தில் இருந்து பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியது இங்கு நினைவுக்கூரத்தக்கது. மேலும், வரும் 2026ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ