3 முறை கருக்கலைப்பு... பலமுறை பாலியல் வன்புணர்வு - பிரபல இயக்குநர் கைது!

Sanoj Mishra: பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டுமின்றி, 3 முறை கருக்கலைப்பு செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து டெல்லியில் பிரபல இயக்குநர் கைதாகி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 31, 2025, 08:35 PM IST
  • கும்பமேளாவில் வைரலான மோனாலிசா பெண்ணை நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்தார்.
  • இயக்குநர் சனோஜ் மிஸ்ராவுக்கு வயது 45 ஆகும்.
  • 28 வயதான பெண் ஒருவர் இவர் மீது புகார் அளித்துள்ளார்.
3 முறை கருக்கலைப்பு... பலமுறை பாலியல் வன்புணர்வு - பிரபல இயக்குநர் கைது!

Sanoj Mishra: சமீபத்தில் நடந்த கும்பமேளா நிகழ்வில் சமூக வலைதளங்கள் மூலம் வைரல் பெண்மணியாக அறியப்பட்டவர், மோனாலிசா. அதாவது, மோனாலிசா ஓவியம் போன்று காட்சியளிப்பதால் அவரை சமூக வலைதளத்தில் பலரும் மோனாலிசா என்றழைத்தனர்.

Add Zee News as a Preferred Source

Sanoj Mishra: ஜாமின் மனு தள்ளுபடி... இயக்குநர் கைது

அந்த வகையில், மோனாலிசாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பளிப்பதாக திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்பவர் கூறினார். அதை தொடர்ந்து, அந்த பெண்ணை சந்தித்து படத்தில் நடிப்பதற்கான காசோலையையும் வழங்கினார். இந்நிலையில், 45 வயதான சனோஜ் மிஸ்ராவை பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இன்று அவர் கைது செய்துள்ளார்.

மேலும் படிக்க | பெண்ணின் வயிற்றில் 17 வருடங்களாக இருந்த 2 கத்தரிக்கோல்கள்! விநோத வைரல் செய்தி..

Sanoj Mishra: 4 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில்...

அவர் டெல்லியின் காஜியாபாத்தில் கைது செய்யப்பட்டார். மும்பை நகரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் மிஸ்ரா, நபி கரீம் காவல் நிலையத்தால் காவலில் எடுக்கப்பட்டார்.

ஒரு 28 வயது பெண் சனோஜ் மிஸ்ரா மீது அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சனோஜ் மிஸ்ரா நான்கு ஆண்டுகளாக தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். அந்தப் பெண், இந்த 4 ஆண்டுகளில் மும்பையில் சனோஜ் மிஸ்ராவுடன் லிவ்-இன் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Sanoj Mishra: மூன்று முறை கருக்கலைப்பு

சனோஜ் மிஸ்ரா தன்னை மூன்று சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாக அந்த 28 வயது பெண் குற்றஞ்சாட்டினார். மேலும், காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சனோஜ் மிஸ்ரா தன்னை திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

டெல்லி காவல்துறையின் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி அன்று பாலியல் வன்கொடுமை, தாக்குதல், கருச்சிதைவு ஏற்படுத்துதல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சனோஜ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sanoj Mishra: பெண்ணை கைவிட்ட இயக்குநர் 

முசாபர்நகரில் இருந்து கருக்கலைப்பு தொடர்பான மருத்துவ ஆதாரங்களை காவல்துறை சேகரிக்க முடிந்தது. குறிப்பாக, 2025ஆம் ஆண்டு பிப். 18ஆம் தேதி அன்று நடந்த ஒரு சம்பவமே அந்த பெண்ணை புகார் அளிக்க தூண்டியுள்ளது. 

சனோஜ் மிஸ்ரா இந்த தேதியில், அந்த பெண்ணை நபி கரீம் பகுதியில் உள்ள ஹோட்டல் சிவாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அன்று அந்த ஹோட்டலில் அந்த பெண்ணுடன் உடலுறவு மேற்கொண்ட பின்னர் அந்த பெண்ணை கைவிட்டுள்ளார். இதை தொடர்ந்தே பெண் அவர் மீது புகார் அளித்துள்ளது.    

இந்த வழக்கை முன்னர் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய நபர்! வைரலாகும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News